நினைத்த காரியத்தில் வெற்றி பெறுவதற்கான சூட்சம வழிபாடு!?

31 May, 2025 | 06:00 PM
image

இன்றைய திகதியில் எம்மில் பலரும் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக பல்வேறு வகையினதான தொழில்களை வெற்றிகரமாக செய்து வருகிறார்கள். இதில் தங்களுக்கான வெற்றி சூத்திரத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை.

அதே தருணத்தில் தங்களுடைய வெற்றிக்காக அவர்கள் ரகசியமான சூத்திரம் பலனளிக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறார்கள்.

அந்த இரகசியமான சூத்திரத்தை அவர்கள் உள்ளுணர்வின் அடிப்படையில் மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இந்த தருணத்தில் அவர்கள் தங்களின் தொழிலில் நினைத்த வெற்றியை அடைவதற்காக பல்வேறு வழிபாடுகளையும் மேற்கொள்கிறார்கள்.

இது தொடர்பாக எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் இவர்களின் வெற்றிக்கு அடித்தளமாக திகழும் ஒரு சூட்சம வழிபாட்டை அனைவரும் நன்மை பெறும் வகையில் முன்மொழிந்திருக்கிறார்கள்.‌

குறிப்பாக லலிதாம்பிகை சகஸ்ரநாம மந்திரத்தில் குறிப்பிட்ட ஏழு சக்தி வாய்ந்த மந்திரங்களை தெரிவு செய்து .. நாளாந்தம் காலையில் 11 முறையும் , மாலையில் 11 முறையும் ஒரு முகமான மனதுடன் உச்சரிப்பார்கள். அந்த மந்திரம் இதுதான்.

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ!

ஓம் அன்னதாயே நமஹ!

ஓம் வசுதாயே நமஹ!

ஓம் ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயே நமஹ!

ஓம் கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி ஸேவிதாயே நமஹ!

ஓம் சிவசக்தியைக்ய ரூபிணியே நமஹ!

ஓம் லலிதாம்பிகையே நமஹ!

இந்த ஏழு வலிமை வாய்ந்த மந்திரத்தை நீங்கள் உச்சரிக்கத்தொடங்கி.. லட்சம்  எனும் எண்ணிக்கையைக் கடக்கும் போது நீங்கள் நினைத்த இலக்குகளை எட்டிப்பிடித்திருப்பீர்கள்.‌ அதாவது நீங்கள் நினைத்த காரியத்தில்.. நினைத்த வகையில் வெற்றி கிடைத்திருக்கும்.‌

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிந்த உறவுகள் மீண்டும் ஒன்றிணைவதற்கான பிரத்யேக...

2026-05-16 19:36:14
news-image

பண வசியம் நாளாந்தம் நடைபெறுவதற்கான பிரத்யேக...

2026-05-15 15:25:11
news-image

வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் சூட்சம குறிப்பு..!?

2026-05-14 17:07:31
news-image

கணவன்- மனைவி இடையே ஒற்றுமை அதிகரிப்பதற்கான...

2026-05-13 18:05:34
news-image

தன வரவை அதிகரித்துக் கொள்வதற்கான பிரத்யேக...

2026-05-12 15:00:56
news-image

கேது தோஷத்தை நீக்குவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-05-11 17:02:59
news-image

கடன் தீர்வதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-05-07 14:47:36
news-image

வீட்டில் செல்வ வளத்தை மேம்படுத்துவதற்கான குறிப்பு..!?

2026-05-06 18:13:58
news-image

உலக சமாதான ஆலயத்தில் நடைபெற்ற பரஞ்சோதி...

2026-05-06 18:06:01
news-image

ஞான வள்ளல் பரஞ்சோதி மகானின் 126...

2026-05-05 17:38:08
news-image

ஆயுளை அதிகரிப்பதற்கான பிரத்யேக வழிபாடு..!

2026-05-02 17:01:33
news-image

சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கான வழிமுறை..!?

2026-05-01 15:39:30