குழந்தைகளுக்கு பிடித்த வாழைப்பழ தோசை

31 May, 2025 | 05:35 PM
image

வாழைப்பழ தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.......

தேவையான பொருட்கள்:

  • வாழைப்பழம் - 3
  • துருவிய வெல்லம் - 1 கப் 
  • துருவிய தேங்காய் - 1/2 கப்
  • ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி 
  • முந்திரி பருப்பு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது 
  • பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி 
  • உப்பு - 1 சிட்டிகை 
  • கோதுமை மாவு - 1 கப் 
  • பால் - 1/2 கப் 
  • நெய் 

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சேர்க்கவும்.

2. அதில் துருவிய வெல்லம், துருவிய தேங்காய், ஏலக்காய் தூள், நறுக்கிய முந்திரி பருப்பு, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

3. பிறகு அதில் பாதி அளவு கோதுமை மாவை சேர்த்து கலந்து, பின்பு சிறிது சிறிதாக பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.

4. பின்பு மீதம் உள்ள கோதுமை மாவை சேர்த்து கலந்து, பிறகு தேவையான அளவு பால் சேர்த்து சரியான பதத்திற்கு மாவை கலந்து கொள்ளவும். பிறகு 10 நிமிடம் ஊறவிடவும்.

5. அடுத்து தோசைக்கல்லில் நெய் தடவி, தோசைக்கல் சூடானதும், அதில் சிறிதளவு மாவை ஊற்றவும். மறு பக்கம் திருப்பும் முன் தோசையின் மேல் நெய் ஊற்றவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும். அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்.

6. இரு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் வாழைப்பழ தோசையை சூடாக பரிமாறவும்..

முக்கிய செய்திகள்

icon-left
icon-right