“தெமட்டகொடை சமிந்த”வுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை டிசம்பர் மாதம்!

31 May, 2025 | 11:56 AM
image

போதைப்பொருள் கடத்தல் மூலமாக சம்பாதித்த 27 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை உதித் நிஷாங்க என்ற பெயரில் உள்ள வங்கிக் கணக்கின் ஊடாக பணப்பரிமாற்றங்கள் செய்துக்கொண்ட வழக்கின் இரண்டாவது சந்தேக நபராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “தெமட்டகொடை சமிந்த” என அழைக்கப்படும்  சமிந்த ரவி ஜயநாத் என்பவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் முதலாவது சந்தேக நபர் உதித் நிஷாங்க என்பவர் ஆவார்.

இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுல ரத்நாயக்க முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றில் ஆஜரான பொலிஸார், “தெமட்டகொடை சமிந்த”  உதித் நிஷாங்க என்ற பெயரில் உள்ள வங்கிக் கணக்கின் ஊடாக பணப்பரிமாற்றங்கள் செய்துக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் இதனால் இந்த வழக்கின் இரண்டாவது சந்தேக நபராக  “தெமட்டகொடை சமிந்த”வின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதனை கருத்தில் கொண்ட நீதவான் இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57
news-image

நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை...

2026-02-17 17:14:26
news-image

மூதூரில் டிப்பர் வாகனத்தில் கட்டாக்காலி மாடு...

2026-02-17 17:01:19
news-image

இலங்கை மற்றும் ஜப்பான் இடையே பொருளாதார...

2026-02-17 16:44:37
news-image

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ; கொழும்பில்...

2026-02-17 16:14:10