இலங்கையானது தொடர்ச்சியாக பல்வேறு பொருளாதார மாற்றங்களை கடந்து வரும் நிலையில், NDB வங்கி அதன் நீண்டகால மற்றும் நம்பகமான தங்கக் கடன் வசதி மூலம் நம்பிக்கை வாய்ந்த நிதியியல் பங்குதாரராக தனது பங்கினை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இலங்கையர்கள் மத்தியில் தங்கம் சார்ந்த ஆபரணங்கள் நம்பகமான தனிப்பட்ட சொத்துக்களில் ஒன்றாகத் திகழ்கின்றன, மேலும் அவசர பணத் தேவைகள் ஏற்படும் தருணங்களில் அது பெரும்பாலும் நிலைத்தன்மைக்கான முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
நிதியியல் ரீதியான சிக்கல்கள் எவருக்கும் ஏற்படலாம் என்ற புரிதலின் அடிப்படையில் NDB வங்கியின் தங்கக் கடன் சேவையானது கட்டமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிக்கலான நிலைமை ஒன்று ஏற்படும்போது அதற்கான தீர்வானது இரக்கம் , பாதுகாப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் வழங்கப்படுவது அவசியம்.
இதற்கிணங்க இவ்விடயத்தில் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கும் நோக்குடன், சந்தையில் மிகக் குறைந்த மாதாந்த வட்டி விகிதமாக வெறும் 0.88% அறவிடப்படுகிறது.
NDB வங்கியில் 2005 ஆம் ஆண்டு தங்கக் கடன் சேவை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இது பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இந்தத் துறையில் வங்கியின் பெருபான்மையான வெற்றியானது இயற்கையான வளர்ச்சி மற்றும் வாய்மொழி பரிந்துரைகள் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று NDB தங்கக் கடன் சேவைகளின் முகாமையாளர் அமில எதிரிசிங்க தெரிவித்தார்.
முன்னெப்போதையும் விட நடைமுறைரீதியிலான நிதி தீர்வுகள்மிகவும் அவசியமான ஒரு சகாப்தத்தில், NDB வங்கி பயனுள்ள வசதிகளை வழங்குவதில் உறுதியாக உள்ளதுடன் வாடிக்கையாளர் பராமரிப்பில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
மேலதிக தகவலுக்கு, வாடிக்கையாளர்கள் NDB வங்கியிற்கு 011 744 8888 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் அழைப்பு விடுக்கலாம் அல்லது தனிப்பயனாக்கப்பட்ட உதவிக்கு அருகிலுள்ள கிளையினை பார்வையிடுமாறு கோரப்படுகிறார்கள்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM