உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு "Clean Sri Lanka" ஒத்துழைப்புடன் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாய்க்கால்களை நிலையாக பேணுவதை இலக்காக கொண்டு அவற்றை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு வெள்ளிக்கிழமை (30) நகர அபிவிருத்து, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்க தலைமையில் நடைபெற்றது.
நகர பகுதிகளில் வாய்க்கால்களை அண்டிய சுற்றுச் சூழல் சுத்தப்படுத்தும் பணி நகர அபிவிருத்தி, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சு அமைந்துள்ள செத்சிரிபாய வளாகத்தின் அருகில் காணப்படும் பொல்துவ வாய்க்காலிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. நகர அபிவிருத்தி, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சு அமைச்சின் கீழுள்ள இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சுற்றாடல், சமூகம், ஒழுக்கம் உள்ளிட்ட மூன்று தூண்களை முதன்மைப்படுத்திய "Clean Sri Lanka" வேலைத்திட்டத்தின் கீழ் நீரின் தரத்தை பாதுகாத்தல் மற்றும் வௌ்ளத்தை கட்டுப்பத்துவதற்கான சர்பன்டைன் வாய்க்கால், செபஸ்தியன் வாய்க்கால்,மாவதகம வாய்க்கால், தெமடகொட வாய்க்கால் உள்ளிட்ட கொழும்பு தலைநகரின் பிரதான வாய்க்கால்கள் சுத்தப்படுத்தப்பட்டு பேணப்படும்.
இதன்போது "Clean Sri Lanka" செயலகத்தின் ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் எஸ்.பீ.சீ.சுகீஸ்வர, நகர அபிவிருத்தி, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, இலங்கை காணி அபவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் சமன் ஸ்ரீ செனவீர, பதில் நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் ஏ.எச்.துஷாரி, பதில் மேலதிக நிறைவேற்று அதிகாரி எஸ்.பீ.முதுமால உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM