இன்றைய திகதியில் எம்மில் பலரும் காணி தொடர்பான பல வகையினதான சிக்கல்களை சந்தித்து கொண்டிருப்பார்கள். பூர்வீக சொத்து, சொந்த காணி, ஆக்கிரமிக்கப்பட்ட காணி, விற்பனை ஆகாத காலி காணி, காணியை வாங்கி அதனை கட்டுமானமாக உருவாக்கும் போது எதிர்பாராத தடை என ஏராளமான பிரச்சனைகள் இருக்கக்கூடும்.
இத்தகைய பிரச்சனைகளால் மன உளைச்சல், அவமானம் போன்ற விவரிக்க இயலாத பல சங்கடங்களையும் சந்தித்திருப்பார்கள். இதனை மாற்றி அமைத்து காணி தொடர்பான பிரச்சனைகளுக்கு முழுமையான நிவாரணம் பெறுவதற்காக எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சூட்சமமான வழிபாட்டை முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : மண்ணாலான புது அகல் விளக்கு - வெண்கடுகு - கருநீல வண்ண துணியிலான திரி, நல்லெண்ணெய்.
உங்களுடைய வீட்டிற்கு அருகே இருக்கும் வராஹி அம்மன் ஆலயம் அல்லது சன்னதியை தெரிவு செய்து கொள்ளுங்கள். சனிக்கிழமைகளில் காலை 6:00 மணி முதல் 7:00 மணிக்குள் அல்லது இரவு 8 மணி முதல் ஒன்பது மணிக்குள் வராஹி அம்மன் ஆலயத்திற்கு சென்று, அகல் விளக்கில் கருநீல வண்ண துணியில் சிறிதளவு வெண் கடுகினை இட்டு முடிச்சிட்டு, அதனை அகல் விளக்கிற்குள் வைத்து நல்லெண்ணையை ஊற்றி, தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
அந்த தருணத்தில் 'காணி தொடர்பான சிக்கல்களுக்கு விரைவாகவும், நிறைவாகவும் தீர்வை தாருங்கள். வராஹி தாயே!' என பிரார்த்திக்க வேண்டும். இந்த பிரார்த்தனையை தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகளில் மேற்கொண்டால்.. அதன் பிறகு 48 நாட்களுக்குள் உங்களுடைய காணி தொடர்பான பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM