இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த தூத்துக்குடியில் மிகவும் பிரபலமான சிக்கன் சால்னா செய்வது எப்படி என்று பார்ப்போம்......
தேவையான பொருட்கள் :
- பட்டை
- கிராம்பு - 7
- ஏலக்காய் - 4
- மிளகு - 2 தேக்கரண்டி
- சீரகம் - 2 தேக்கரண்டி
- சோம்பு - 2 தேக்கரண்டி
- பொட்டு கடலை - 2 மேசைக்கரண்டி
- கசகசா - 1 தேக்கரண்டி
- கல்பாசி
- முந்திரி பருப்பு - 5
- துருவிய தேங்காய் - 1/4 கப்
- சின்ன வெங்காயம் - 5
- சிக்கன் சால்னா செய்ய
- சிக்கன் - 1 1/2 கிலோ
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- பட்டை - 1 சிறிய துண்டு
- கிராம்பு - 2
- ஏலக்காய் - 1
- பிரியாணி இலை - 1
- வெங்காயம் - 4 நறுக்கியது
- இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
- பச்சை மிளகாய் - 2 கீறியது
- தக்காளி - 4 நறுக்கியது
- உப்பு - 4 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
- தனியா தூள் - 2 தேக்கரண்டி
- அரைத்த மசாலா விழுது
- தண்ணீர் - 3 கப்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை :
1. கடாயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சீரகம், சோம்பு, பொட்டு கடலை, கசகசா, கல்பாசி, முந்திரி பருப்பு சேர்த்து 3 நிமிடம் மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.
2. பின்பு நன்கு ஆறவிட்டு மிக்சர் ஜாரில் சேர்த்து அதனுடன் துருவிய தேங்காய், சின்ன வெங்காயம் மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
சிக்கன் சால்னா செய்ய
3. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் பிரியாணி இலை சேர்க்கவும்.
4. பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
5. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்பு கீறிய பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
6. அடுத்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.
7. பின்பு சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கி, பிறகு அரைத்த மசாலா விழுதை சேர்த்து கலந்துவிடவும்.
8. பின்பு தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 20 நிமிடம் வேகவிடவும்.
9. கடைசியாக கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.சிக்கன் சால்னா தயார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM