29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்தடை குறித்து முறைப்பாடுகள் பதிவு !

Published By: Digital Desk 3

30 May, 2025 | 02:45 PM
image

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் நாடளாவிய ரீதியில் மின்தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 29 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தங்களிடம் ஆளனிப் பற்றாக்குறை மற்றும் வளப்பற்றாக்குறைகள் இருந்த போதிலும் சவால்களுக்கு முகங்கொடுத்து மின்தடைகளை சீர் செய்துவருவதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

இதுவரை 29,015 மின்தடை தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள இலங்கை மின்சாரசபை, மின்தடைகள் ஏதாவது ஏற்பட்டிருநு்தால் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது  CEBCare என்ற கையடக்கத்தொலைபேசி செயலி மூலமாகவோ முறைப்பாடு மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மின்தடைகளை வெகுவிரைவில் சீர்செய்யும் அதேவேளை, பொதுமக்கள் பொறுமைகாத்து தமக்கு ஆதரவு வழங்குமாறு மக்களிடம் இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்திசாலி யானைகள் : வைரலாகும் வீடியோ

2025-06-12 19:09:30
news-image

மன்னாரில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான...

2025-06-09 14:07:39
news-image

கடலும் காடும் கலந்த “ஆழிவனம்” 

2025-06-09 14:10:39
news-image

ரயிலுக்குள் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன்...

2025-06-07 12:57:45
news-image

29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்தடை குறித்து...

2025-05-30 14:45:05
news-image

அமானுஷ்யங்கள் நிறைந்த ஜப்பானின் “தற்கொலை காடு”

2025-05-28 16:57:48
news-image

நுவரெலியாவில் இயற்கை அழகின் மையப்பகுதியாக திகழும்...

2025-05-27 18:37:56
news-image

பொலிஸ் அதிகாரியை தாக்கிய “குற்றவாளி” பூனை...

2025-05-24 18:09:10
news-image

ஒரே இடத்தில் மூன்று இயற்கை அற்புதங்கள்!...

2025-05-19 17:24:17
news-image

‘வலையில் கண்ட முகம்…’ யார் இந்த...

2025-05-16 16:58:29
news-image

`நாடாகவே' அங்கீகரிக்கப்படாத நாடுகள்

2025-05-16 13:34:10
news-image

தாஜ்மகாலை தன்னந்தனியாகச் சுற்றி பார்க்க முடியுமா?

2025-05-13 10:42:50