பஞ்சாபை 8 விக்கெட்களால் வீழ்த்தி 9 வருடங்களின் பின்னர் இறுதிக்குள் நுழைந்தது பெங்களூரு

Published By: Vishnu

29 May, 2025 | 10:53 PM
image

(நெவில் அன்தனி)

மல்லன்பூர் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (29) இரவு நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் முதலாவது தகுதிகாண் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிகொண்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

இதன் மூலம் 9 வருடங்களின் பின்னர் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு தகுதிபெற்றுக்கொண்டது.

ஐபிஎல் வரலாற்றில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றிருப்பது இது நான்காவது தடவையாகும்.

தகுதிகாண் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் 14.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பதினொரு வருடங்களின் பின்னர் ப்ளே ஒவ் சுற்றில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் பெற்ற இந்த மொத்த எண்ணிக்கையானது ப்ளே ஓவ் சுற்றில் ஓர் அணியால் பெறப்பட்ட மிகக் குறைந்த இணை மொத்த எண்ணிக்கையாகும்.

மும்பபை இண்டியன்ஸுக்கு எதிராக 2023 ஐபிஎல் ப்ளே ஓவ் சுற்றில் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸும் 101 ஓட்டங்கள் என்ற இதே  குறைந்த மொத்த எண்ணிக்கைக்கு சுருண்டிருந்தது.

இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிவந்த ஆரம்ப வீரர்களான ப்ரப்சிம்ரன் சிங் (7), ப்ரியான்ஷ் ஆரியா (18) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் வெளியேறியது பஞ்சாப் கிங்ஸுக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

தொடர்ந்து அணித் தலைவர் ஷ்ரேயஸ் ஐயர் (2), ஜொஷ் இங்லிஸ் (4), நெஹால் வதேரா (8), ஷஷாங் சிங் (3), முஷீர் கான் (0) ஆகிய ஐந்து முக்கிய துடுப்பாட்ட வீரர்களும் எதிரணியின் பந்துவீச்சுகளை சரியாக புரிந்துகொள்ள முடியாமல் 30 ஓட்டங்களுக்குள் ஆட்டம் இழந்தனர்.

மாக்கஸ் ஸ்டொய்னிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதிலும் அவரால் 26 ஓட்டங்களையே பெறமுடிந்தது.

பின்வரிசையில் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 18 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் சுயாஷ் ஷர்மா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் யாஷ் தயால் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

102 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 10 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

மொத்த எண்ணிக்கை 30 ஓட்டங்களாக இருந்தபோது விராத் கோஹ்லி 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

பில் சோல்ட் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி மயன்க் அகர்வாலுடன் 2ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது அகர்வால் 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

பில் சோல்ட் 27 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 56 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் ரஜாத் பட்டிடார் 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் கய்ல்  ஜெமிசன், முஷீர் கான் ஆகிய இருவரும் 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட் என்ற ஒரே பந்துவீச்சுப் பெறுதியைக் கொண்டிருந்தனர்.

ஆட்டநாயகன்: சுயாஷ் ஷர்மா

இன்றைய போட்டியில் தோல்வி அடைந்த பஞ்சாப் கிங்ஸ் நாளை நடைபெறவுள்ள மும்பை இண்டியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான வெளியேற்றல் போட்டியில் வெற்றிபெறும் அணியை ஞாயிறன்று நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிகாண் சுற்றில் எதிர்த்தாடும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவிப்புலன் குறைபாடுடையோருக்கான T20 தொடர்: இலங்கையை...

2026-07-14 05:10:23
news-image

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது மகளிர்...

2026-07-13 20:58:58
news-image

இந்தியாவுடனான  இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: சேனுஜ...

2026-07-13 21:08:28
news-image

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா,...

2026-07-13 16:14:05
news-image

ஆடவர் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில்...

2026-07-13 15:30:10
news-image

சுப்பர் லீக் கால்பந்தாட்டம் கோலாகலமாக தொடங்கியது...

2026-07-13 10:21:23
news-image

சுவிட்ஸர்லாந்தின் கடும் சவாலை மேலதிக நேரத்தில்...

2026-07-12 15:03:27
news-image

பெலிங்ஹாமின் இரட்டை கோல்களுடன் நோர்வேயை வென்று...

2026-07-12 14:17:29
news-image

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு...

2026-07-12 04:47:37
news-image

ஸ்பெய்ன் - பெல்ஜியம் அணிகள் மோதும்...

2026-07-10 21:27:35
news-image

எம்பாப்பே, டெம்பெல் போட்ட கோல்களின் உதவியுடன்...

2026-07-10 14:02:34
news-image

வவுனியாவில் வடமாகாண குத்துச்சண்டைப் போட்டி ஆரம்பம்

2026-07-10 06:08:28