இரசாயன சிகிச்சையை வழங்குவதால் புற்றுநோய் மேலும் அபாயகரமானதாக மாறுவதற்கு வாய்ப்பு : மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Published By: Robert

07 Jul, 2017 | 10:07 AM
image

புற்­று­நோய்க்கு அளிக்­கப்­படும் இர­சா­யன சிகிச்­சை­யா­னது அந்நோய் தீவி­ர­மாக பரவி மேலும் அபா­ய­க­ர­மாக மாறு­வ­தற்கு வழி­வ­குக்­கலாம் என புதிய ஆய்­வொன்று உரிமை கோரு­கி­றது. 

மேற்­படி இர­சா­யன சிகிச்­சை­யா­னது புற்­றுநோய் வளர்ச்­சியை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான முத­லா­வது சிகிச்சைத் தெரி­வா­க­வுள்­ளது.

ஆனால்  அமெ­ரிக்க நியூயோர்க் நக­ரி­லுள்ள அல்பேர்ட் அயன்ஸ்டீன்  மருத்­துவக் கல்­லூ­ரியைச் சேர்ந்த ஆய்­வா­ளர்கள் மேற்­கொண்ட புதிய ஆய்வில் அந்த சிகிச்சை புற்­று­நோ­யா­ளர்­க­ளுக்கு குறு­கிய கால அளவில் மட்­டுமே பயன் அளிப்­ப­தாக உள்­ள­மைக்­கான சான்று  கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்த இர­சா­யன சிகிச்சை புற்­றுநோய் கட்­டிகள் குருதிச் சுற்­றோட்ட முறை­மை­யி­னூ­டாக திரும்­பவும்  பலம் பெற்று வேக­மாகப் பர­வு­வ­தற்கு வழி­வகை செய்­வ­தாக இந்த ஆய்­வுக்கு தலைமை தாங்­கிய மருத்­துவ கலா­நிதி ஜோர்ஜ் கரா­கி­யன்னிஸ் தெரி­வித்தார்.

மேற்­படி ஆய்வின் முடி­வுகள் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை  வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

புற்­று­நோ­யா­னது சிகிச்­சை­ய­ளிப்­ப­தற்கு கடி­ன­மான நோயா­க­வுள்­ளது.  அது ஏனைய உடல் உறுப்­பு­க­ளுக்குள் பர­வு­கையில் நான்காம் கட்ட அபாய நிலையை அடைந்து சிகிச்சை அளிக்க முடி­யாத சூழ்­நிலை உரு­வா­கி­றது எனத் தெரி­வித்த கலா­நிதி ஜோர்ஜ் கரா­கி­யன்னிஸ்,  தமது ஆய்வின் பெறு­பே­று­களின் பிர­காரம்  புற்­று­நோ­யா­ளர்­க­ளுக்கு இர­சா­யன சிகிச்­சையை வழங்­கு­வதை நிறுத்­து­வ­தற்கு தாம் சிபா­ரிசு செய்­ய­வில்லை எனவும் ஆனால் அந்த சிகிச்­சையை வழங்கும் போது நோயா­ளியின் உடலில்  புற்­றுநோய் கட்­டிகள் அடையும் மாற்­றங்கள் குறித்து தீவிர கண்­கா­ணிப்பை மேற்­கொள்­வது அவ­சி­ய­மா­க­வுள்­ளது எனவும்  கூறினார்.

புற்­றுநோய்க் கட்­டி­களை முழு­மை­யாக அழிப்­ப­தற்கு வழங்­க­வேண்­டிய இர­சா­யன மருந்தின் செறி­வா­னது  நோயா­ளியின் உயி­ருக்கு ஆபத்து விளை­விக்கக் கூடி­யது என்­பதால்  மருத்­து­வர்கள் குறைந்த செறி­வி­லேயே அந்த மருந்தை வழங்­கு­கின்­றனர் எனவும் இது அந்தப் புற்­றுநோய்க் கலங்கள் வேக­மாக பரவவும், இந்த அரை­குறை சிகிச்­சையில் உயிர் பிழைத்திருக்கும் புற்றுநோய்க் கலங்கள் இர சாயன சிகிச்சைகளுக்கு ஈடுகொடுத்து  உயிர் பிழைத்திருக்கக் கூடிய  நிலையை அடைந்து ஏனைய உடல் உறுப்புகளுக்கு பரவும் அபாயமிக்க நிலையை அடையவும் வழிவகை செய்வதாக அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29