(நா.தனுஜா)
அகில இலங்கை தமிழ் காங்கிரஸுடனான இன்றைய சந்திப்பின் பின்னர் தேவையேற்படின் இலங்கைத் தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து கலந்துரையாடமுடியும் என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸுக்கும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணிக்கும் இடையில் புதன்கிழமை (28) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது வட, கிழக்கு மாகாணங்களில் உள்ளுராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
அதனையடுத்து புதன்கிழமை (28) இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து மீண்டும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது தமக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு குறித்து சித்தார்த்தன் பிரஸ்தாபித்தார்.
அதனைத்தொடர்ந்து வியாழக்கிழமை (30) தமக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் சந்திப்பு நடைபெறவிருப்பதாகவும், அதன் பின்னர் தேவையேற்படின் மூன்று கட்சிகளும் இணைந்து கலந்துரையாடமுடியும் எனவும் சுமந்திரன் கூறியதாக சித்தார்த்தன் கேசரியிடம் தெரிவித்தார்.
அதேவேளை உள்ளூ ராட்சிமன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோருடன் நேற்றைய தினம் தான் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM