bestweb

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப் போவதில்லை - உதய கம்மன்பில ; பிமலை கைது செய்து விசாரிக்குமாறும் வலியுறுத்து

29 May, 2025 | 05:46 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பரிசோதனைகள் ஏதுமின்றி சட்டவிரோதமான முறையில் 323 கொள்கலன்களை சுங்கத்தில் இருந்து விடுவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை கைது செய்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளாமல் எனக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளிப்பது எந்த விதத்தில் நியாயமானதாகும். அச்சுறுத்தல்களினால் அடிபணியப் போவதில்லை என்பதை அரசாங்கத்துக்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பரிசோதனைகள் ஏதுமின்றி சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பான உண்மையை அரசாங்கம் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. இந்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு தான் பணித்ததாக கப்பற்றுறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டிருந்தார்.

சுங்கத் திணைக்களம் கப்பற்றுறை அமைச்சின் விடயதானங்களுக்குள் உள்ளடங்காது. ஜனாதிபதியின் வசமுள்ள நிதி அமைச்சின் விடயதானத்துக்குள் உள்ளடங்கும். ஆகவே, அமைச்சர் பிமல் ரத்நாயக்க சட்டவிரோதமான முறையில் இந்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு பணித்துள்ளார். ஆகவே அவரை உடன் கைது செய்து விசாரிக்குமாறு குறிப்பிட்டேன்.

பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் குறித்து நான் குறிப்பிட்ட விடயங்களுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்கள். சட்டவிரோதமான செயற்பட்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை கைது செய்து விசாரணை செய்வதை விடுத்து என் மீது முறைப்பாடு அளிப்பது எந்த விதத்தில் நியாயமாகும்.

இந்த கொள்கலன்கள் தொடர்பில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் சுங்கத் திணைக்களத்திடம் முன்வைத்த கேள்விகளுக்கு சுங்கத் திணைக்களம் 'தாங்கள் கோரிய கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குரிய ஆவணங்கள் தற்போது சுங்கத் திணைக்களத்திடம் இல்லை' என்று எனக்கு பதிலளித்துள்ளது. தற்போது இல்லையாயின் ஆரம்பத்தில் அந்த ஆவணங்கள் இருந்துள்ளது. தற்போது காணாமலாக்கப்பட்டுள்ளது என்றே கருத வேண்டும்.

அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டுவதால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக என்னை அச்சுறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. அச்சம் என்பதொன்று இருக்குமானால் இந்த அரசாங்கத்துடன் நான் மோதியிருக்க மாட்டேன் என்பதை ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் குறிப்பிட்டுக்கொள்கிறேன் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-07-14 06:09:04
news-image

20 கோடி ரூபா பெறுமதியான அதிநவீன...

2025-07-14 06:02:05
news-image

கம்பஹா பல்லெவே பகுதியில் பஸ் மோட்டார்...

2025-07-14 02:58:28
news-image

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர்...

2025-07-14 01:57:38
news-image

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் ...

2025-07-14 01:54:11
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு...

2025-07-13 17:12:59
news-image

தெமட்டகொடை குப்பை மேட்டுப்பகுதியில் தீ

2025-07-14 08:50:00
news-image

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ்...

2025-07-13 20:18:54
news-image

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை...

2025-07-13 17:12:09
news-image

நித்தகைக்குளம் சீரமைப்புவேலைகளை பார்வையிட்டார் எம்.பி. ரவிகரன்

2025-07-13 21:48:58
news-image

யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல்...

2025-07-13 21:20:29
news-image

நாளை முதல் எதிர்வரும் 18 வரை...

2025-07-13 20:10:28