கண்டி மாவட்டத்தில் டெங்கு பரவல் அதிகரிப்பு!

29 May, 2025 | 04:26 PM
image

கண்டி மாவட்டத்தில் டெங்கு வேகமாக பரவி வருவதாகவும், மிகத் தீவிரமாகப் பரவும் பிரதேசங்களில் ஒன்றாக பெயரிடக்கூடிய நிலையை கண்டி அண்மித்துள்ளதாக சமூக சுகாதார வைத்திய அதிகாரி விசேட வைத்திய நிபுணர் சுரங்க பிரனாந்து தெரிவித்தார். 

கண்டி செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

ஒரு பிரதேசத்தில் வாரத்துக்கு 100க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயாளர்கள் என இனங்காணப்பட்டால் அப்பிரதேசம் தீவிரமாக டெங்கு பரவும் பிரதேசமாக சுகாதார வைத்திய அதிகாரியால் அடையாளப்படுத்தப்படும்.

அந்த அடிப்படையில் தற்போது கண்டியும் அத்தகைய இலக்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. 

மே மாதம் இதுவரை கண்டி மாவட்டத்தில் 340 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இது மேற்படி இலக்கை அண்மித்த தொகையாகும்.

யட்டிநுவர பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மற்றும் கண்டி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு என்பவற்றிலேயே அதிகளவு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதே நேரம் கடந்த வாரத்தில் மட்டும் கண்டி மாவட்டத்தில் 116 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனவே, எந்த அடிப்படையில் பார்த்தாலும் கண்டி தீவிர டெங்கு அபாய வலயமாக மாறிவருகிறது என்றார்.

மாவட்ட ஒழுங்கிணைப்புக் குழுத் தலைவர் காணி விவசாய கமநல சேவைகள் அமைச்சர் லால்காந்த தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இம்மாதத்தின் முதல் 12 நாட்களில் நாட்டில்...

2026-07-13 11:48:46
news-image

இலங்கை - உஸ்பெகிஸ்தான் இடையே புதிய...

2026-07-13 11:36:24
news-image

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க...

2026-07-13 11:20:46
news-image

மட்டக்களப்பு தளவாய் வீட்டுத்திட்ட வீதியை புனரமைக்குமாறு...

2026-07-13 11:00:38
news-image

பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ;...

2026-07-13 11:13:39
news-image

இலங்கையின் அதிக வயதான பெண்களில் ஒருவரான...

2026-07-13 10:20:18
news-image

வேளாண்மைத் துறையை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்...

2026-07-13 09:54:26
news-image

களுத்துறை மாவட்ட செயலகத்தில் திடீர் தீ...

2026-07-13 09:56:19
news-image

சில மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில்...

2026-07-13 09:25:14
news-image

பேராதனை, கொழும்பு ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்களுடன்...

2026-07-13 09:18:27
news-image

டெங்கு அபாயத்தால் மூடப்பட்டிருந்த கட்புல, அரங்கேற்றக்...

2026-07-13 09:16:08
news-image

மஹரகமவில் துப்பாக்கியுடன் இளைஞர் கைது!

2026-07-13 09:06:29