உங்கள் வீட்டினை முதலில் திருத்துங்கள்

Published By: Robert

07 Jul, 2017 | 10:21 AM
image

Image result for அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் virakesari

உங்­க­ளது கட்­சியின் வீட் ­டினை முதலில் திருத்­துங் கள் எனக் கூறிய சிறைச்­சாலை மறு­சீரமைப்பு மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்­வ­ளிப்பு மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் பொருத்து வீட்­டுத்­திட்டம் திட்­ட­மிட்­ட­படி முன்­னெ­டுக்­கப்­ப­டு­மெ­னவும் உறு­தி­படத் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக் கிழமை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.சிறி­தரன் சமர்ப்­பித்த சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணைக்கு பதி­ல­ளித்து உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், 

இத்திட்டத்தை பிர­த­மரின் ஆலோ­ச­னை யின் பிர­கா­ரமே நான் கொண்டு வந்தேன். இந்த வீட்­டுத்­திட்டம் சம்­பந்­த­மாக இந்த பாரா­ளு­மன்­றத்தில் தொடர்ச்­சி­யாக எதிர்ப்­புக்­க­ளையே வெளிப்­ப­டுத்தி வரு­வது தான் உங்­களின் இயல்­பாக இருக்­கின்­றது. இன்று (நேற்று) கூட இந்த ஒத்­தி­வைப்­பு­வேளை பிரே­ர­ணையை கொண்டு வந்­த­வரும் மற்­றொ­ரு­வருமே எதிர்க்­கின்­றீர்கள். ஆனால் ஏனைய உறுப்­பி­னர்கள் அதனை எதிர்க்­க­வில்லை.

65 ஆயிரம் வீட்­டுத்­திட்டம் வந்­தது. தற்­போது உங்­களால் தான் ஆறா­யி­ர­மா­கி­யுள்­ளது. மக்கள் வீடு­களை எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றார்கள். நீங்கள் எதற்­காக எதிர்க்­கின்­றீர்கள் என்று எனக்­குத்­தெ­ரி­யாது. என்ன கார­ணத்­திற்­காக எதிர்ப்பு வெளி­யி­டு­கின்­றீர்கள்? தற் ­போது சுற்­றாடல் தொடர்­பான சிந்­த­னை­களை இங்கு முன்­வைத்­தார்கள். கல், மண் ஆகிய கனிய வளங்­களை பெற்­றுக்­கொள்­வதில் பிரச்­சி­னைகள் நில­வு­கின்­றன. ஊடகங்­க­ளுக்கு இந்த விட­யங்கள் தெரி­யாதா? 

மாதிரி வீடு­களை பார்த்­து­விட்டு சவப்­பெட்டி என்­கின்­றீர்கள். சவப்­பெட்டி எவ்­வா­றி­ருக்கும் என்று போய் பாருங்கள். நீங்கள் அங்கு சென்று பாருங்கள். மக்கள் வீடு­க­ளுக்­காக  விண்­ண­ப்பித்­தி­ருக்­கின்­றார்கள். நீங்கள் முதலில் உங்­க­ளு­டைய கட்­சியின் வீட்டை சரி செய்­யுங்கள். அதன் பின்னர் மக்­க­ ளுக்­கான வீடுகள் தொடர்பில் பார்க்­கலாம்.

மக்கள் குடில்­களில் வசிக்­கின்­றார்கள். (புகைப்­ப­டத்­தினை தூக்கி காட்­டி­ய­வாறு) ஆனால் நீங்கள் எல்லாம் பெரிய மாளி­கை யில் வாழ்­கின்­றீர்கள். வீட்­டுத்­திட்­டத்­தினை எதிர்க்­கின்­றீர்கள். அதற்கு மாற்­றுத்­திட்­டத்­தினை கோரினேன். ஒருவர் கூட எனது அமைச்­சுக்கு வருகைதந்து மாற்­றுத்­திட்டத் தினை வழங்­க­வில்லை. அதற்கு நிதி இல்லை. இந்த திட்­டத்­தினை மறுப்­ப­வர் கள் முதலில் மாற்றுத் திட்­டத்தை முன்­மொ­ழி­யுங்கள். நீங்கள் ஆடம்­ப­ரத்தில் பேசு­கின்றீர்கள். உங்­க­ளுக்கு மக்­களின் எதிர்ப்பு வரும் போது விளங்கும்.  

இப்­போது நான் தெளி­வாக கூறு­கின் றேன். பொருத்து வீட்­டுத்­திட்­டத்­தினை மக்­க­ளுக்­காக நிச்­சயம் முன்­னெ­டுப்பேன். அதனை வழங்­குவேன். நீங்கள் கூறினாலும் அதனை நிறுத்தமாட்டேன். நீங்கள் மக்க ளுக்காக எதனை செய்துள்ளீர்கள்? நீங்கள் நினைத்த மாதிரி செய்ய முடியாது. உங் களது திட்டத்தை கொண்டு வாருங்கள். அதன் பின்னர் பார்க்கலாம். இப்போதைக்கு இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவது உறு தியானது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56