பயங்கரவாத தடைச்சட்டத்தை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக நீக்கவேண்டும் மாற்றீடாக புதிய சட்டம் எதனையும் கொண்டுவரக்கூடாது என 240க்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் சட்டத்தரணிகளும் மதகுருமாரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நீதியமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.சிவில் சமூக அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் இந்த கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக புதிய சட்டம் எதனையும் கொண்டுவரக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ள இவர்கள் ,ஐந்து பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளனர்.
நீதியமைச்சருக்கான கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை கொண்டுவருவது குறித்து பரிந்துரைகளை கருத்துக்களை யோசனைகளை முன்வைக்குமாறு கோரும் பத்திரிகை அறிவிப்பு குறித்து (லங்காதீப 16-5-2025 இல் வெளியானது இலங்கையின் கரிசனை கொண்டுள்ள பிரஜைகள் என்ற அடிப்படையில் நாங்கள் பதிலளிக்கின்றோம்.
பொதுமக்களிற்கு தங்கள் கருத்துக்கள் யோசனைகள் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு வெறுமனே இரண்டுவார கால அவகாசம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சி குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியினர் நாடாளுமன்ற தேர்தலிற்கு முன்னர் பொதுமக்களிற்கு உத்தரவாதம் வழங்கியிருந்தனர்.
பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற மிகக்கடுமையான ஒடுக்குமுறை சட்டங்களை அரசாங்கம் தொடர்ந்தும் தக்கவைக்காது என்ற வெளிப்படையான வாக்குறுதியும் வழங்கப்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம் என வெளியாகும் அறிக்கைகளும், புதிய பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமையும்,மக்களிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை மீறும் செயல்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என தேசிய மக்கள் வழங்கிய வாக்குறுதி தற்போது ஆட்சியில் உள்ள கட்சியினால் மழுப்பப்படுகின்றது.
இது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ளவர்களை பார்க்கும்போது இலங்கையின் பெரும்பான்மை நிர்வாக சாதனங்கள் , இனவெறி நிறுவனமயப்படுத்தப்பட்ட நிலையில் எவ்வாறு சட்டங்களை நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்ற விடயம் குறித்த அறியாமையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த குழுவில் முக்கியமானவர்கள் உள்வாங்கப்படவில்லை, பெருமளவிற்கு அரசாங்க அதிகாரிகள் காணப்படுகின்றனர், இராணுவத்தினரும்,பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும் காணப்படுகின்றனர், ஆனால் பாதிக்கப்ட்டவர்களோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களோ தமிழ் முஸ்லீம் சமூகத்தினரோ இடம்பெறவில்லை.
இதன் காரணமாக இந்த குழு மக்களின் பார்வையில் எந்த நியாயதன்மையும் இல்லாததாக காணப்படுகின்றது, மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளக்கூடிய அமைப்பாக,குறிப்பாக எங்கள் சமூகத்தில் உள்ள ஆபத்தான நிலையில் உள்ளவர்களின் நலன்களை கருத்தில் கொள்ளக்கூடிய அமைப்பாக இது காணப்படவில்லை.
ஈவிரக்கமற்ற பயங்கரவாத தடைச்சட்டத்தினால் மனித உயிர்களிற்கு ஏற்பட்ட பாரிய அளவு இழப்புகள் . ஏற்படக்கூடிய இழப்புகள் குறித்து நீதியமைச்சர் தீவிரமாக ஆராயவேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM