பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம் அதற்கு மாற்றீடான சட்டமும் வேண்டாம் - கொழும்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டாக வேண்டுகோள்

Published By: Rajeeban

29 May, 2025 | 11:38 AM
image

பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம் அதற்கு மாற்றீடான சட்டமும் வேண்டாம் என தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர்  ஜோசப் ஸ்டாலின்பயங்கரவாத  தடைச்சட்டத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட கட்சியே தற்போது ஆட்சியில் உள்ளது என்பதை நினைவுபடுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ஒழிப்பதற்கு உடன் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அதை ஆரைவதாகக் கூறி பல்வேறு குழுக்களை அமைத்து காலத்தை இழுத்தடிக்கும் யுக்தியை அரசாங்கம் கையாண்டு வருகிறது. இச் சட்டத்தை மீளப்பெற்றாலும் அதே போன்றதொரு ஒடுக்குமுறை சட்டத்தை கொண்டுவருவோம் என்று அரசாங்க தரப்பில் சிலரால் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. அதேபோல் நிகழ்நிலை காப்புச் சட்டம்  மீளப்பெறப்படும் என்று சொல்லப்பட்டாலும் அது தொடர்ந்து அமுலிலேயே உள்ளது. 

இந்தச்சூழலில் மக்கள் பேரவைக்கான இயக்கம் உட்பட பல்வேறு வெகுசன அமைப்புக்கள் மனித உரிமை ஆரவலர்கள் அரசியல் கட்சிகள் இணைந்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ஒழிப்பதற்கும் இதேபோன்றதொரு ஒடுக்குமுறைச் சட்டம் மீண்டும் கொண்டுவரப்படாமல் தடுக்கவும் இணைந்து செயற்பட உடன்பட்டுள்ளன. அது தொடர்பில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது

அந்த செய்தியாளர் மாநாட்டில் ஜோசப் ஸ்டாலின் இதனை    தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டாம்  என அரசாங்கத்திற்கு பரிந்துரைததை தொடர்ந்து ரணில் ராஜபக்ச அரசாங்கம் மாற்று சட்டத்தை கொண்டுவர முயன்றது.அந்த நேரம் கூட இந்த அரசில் உள்ள கட்சிகள் ஜேவிபி உறுப்பினர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக நின்றார்கள்.

இந்த சட்டத்தை 1979ம் ஆண்டு கொண்டுவந்தது தமிழ் மக்களிற்கு எதிராகஇதமிழ் மக்களின் செயற்பாடுகளிற்கு எதிராக.

1984 ஆண்டுதான் முதன் முதலில் சிங்கள இளைஞர்களிற்கு எதிராக பயன்படுத்தினார்கள் தெணியாயவில்உள்ள ஜேவிபி முகாமில் இருந்த இளைஞர்களை கைதுசெய்வதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தினார்கள்.

ஜேவியின் பல பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு கட்சிதான் தற்போது ஆட்சியில் உள்ளது.

அவர்கள் திருப்பி மாற்றுசட்டத்தை கொண்டுவருவதற்காக முன்வைக்கின்ற காரணங்களை ஏற்றுக்கொள்வது எப்படி என தெரியவில்லை.

தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றார்கள் இன்றும் கூட ( 28-5-25) கிளிநொச்சியில் வாசுகி வல்லிபுரம் என்கின்ற செயற்பாட்டாளர் வீட்டிற்கு சென்ற  பொலிஸார் 31ம் திகதி விசாரணைக்காக வருமாறு தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் இவ்வாறு பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்திக்கொண்டு  அதற்கு மாற்றீடான சட்டத்தை கொண்டு வரமுயல்கின்றது - நாங்கள் சொல்கின்றோம் பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம் அதற்கு மாற்றீடான சட்டமும் வேண்டாம்.தெரிவித்துள்ளார்.

பங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்குப் பதிலீடாக புதிய சட்டமொன்றைக் கொண்டுவந்து நாட்டை மீண்டும் இந்த அரசாங்கம் பின்னோக்கிக் கொண்டுசெல்வதோடு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறுகிற செயற்பாட்டை மேற்கொள்கிறது

என இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட செயற்பாட்டாளர் சந்துன் துடுகல தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-08 10:20:33
news-image

விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

2025-11-08 09:49:31
news-image

பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

2025-11-08 09:49:12
news-image

இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி!

2025-11-08 09:37:30
news-image

காலி - ஜாகொட்டுவெல்ல கடற்கரையில் அடையாளம்...

2025-11-08 08:56:17
news-image

துங்கல்பிட்டியவில் சட்டவிரோத பீடி இலைகள் மற்றும்...

2025-11-08 08:55:50
news-image

நீர்கொழும்பு ஏத்துகல கடல் நீரோட்டத்தில் சிக்கியவர்...

2025-11-08 08:47:45
news-image

கெப்பட்டிபொல பகுதியில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி...

2025-11-08 08:45:42
news-image

இன்றைய வானிலை

2025-11-08 06:05:57
news-image

நாட்டு மக்களின் நலன் கருதி அரசாங்கம்...

2025-11-08 04:51:39
news-image

அடுத்த ஆண்டு மூன்றாவது காலாண்டில் டிஜிட்டல்...

2025-11-08 04:46:37
news-image

ஓய்வுபெற்ற ஆசிரியர் அதிபர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க...

2025-11-08 04:43:23