விமன் குடியிருப்பு திட்டத்திற்கு பிரத்தியேக 100% நிதியுதவியை வழங்க NDB வங்கி ஜோன் கீல்ஸ் பிரொபர்டீஸுடன் இணைவு

Published By: Digital Desk 2

29 May, 2025 | 10:32 AM
image

NDB வங்கியானது  ஜா-எலாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விமன் [VIMAN ]குடியிருப்பு திட்டத்தின் 3 ஆம் கட்டத்திற்கு 100% வீட்டுக் கடன் நிதி தீர்வை வழங்கும் முகமாக ஜோன் கீல்ஸ் பிரொபர்டீஸுடன்[John Keells Properties] தனது பிரத்தியேக பங்குடைமை தொடர்பாக  அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள  418 நவீன குடியிருப்பு அலகுகள் மற்றும் ஒட்டுமொத்த திட்டத்தின் 75% ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன்  விமன் மாடி குடியிருப்பு திட்டமானது  சமகால நகர்ப்புற வாழ்க்கையை அமைதியான இயற்கை சூழலுடன் கலந்து வழங்குகிறது. 

ஒவ்வொரு அலகும் அமைதி , தனியுரிமை மற்றும் வாழ்க்கை முறையின் சிறந்த சமநிலையை வழங்கும் வகையில்  3 ஆம் கட்டத்தில் 2-படுக்கையறைகள்  மற்றும் 3-படுக்கையறைகள் தெரிவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

NDB வங்கியானது   இந்த பிரத்தியேக நிதியியல்  சலுகையின் மூலம், வருங்கால வீட்டு உரிமையாளர்கள் தமது  கனவு இல்லத்தை 100% நிதியுதவியுடன் பாதுகாக்க உதவுவதுடன்  இது முன்பண நிதிச் சுமையை நீக்கி, வீட்டு உரிமையை முன்னெப்போதையும் விட இலகுவில் அணுகக்கூடியதாக மாற்றுகிறது. 

இக்கடன் வசதிக்கு விண்ணப்பிப்பது தொடர்பான  மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள ஆர்வமுள்ள தரப்பினர் தமக்கு  அருகிலுள்ள NDB கிளைக்கு செல்லுமாறு அல்லது 0773347158 என்ற எண்ணில் சாரங்கவையோ அல்லது 0771230624 என்ற எண்ணில் உமேஷையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right