நாட்டில் வேக­மாக பர­வி­வரும் டெங்கு  நோயினால் பாதிக்­கப்­பட்டோர் எண்­ணிக்கை 80 ஆயி­ரத்தை தாண்­டி­யுள்­ளது.  அதன்­படி டெங்கு சிகிச்சை நட­வ­டிக்­கை­க­ளுக்­காக விசேட வைத்­திய நிபு­ணர்கள் உள்­ளிட்ட 250 இற்கும் அதி­க­மான வைத்­தி­யர்­களை நாடு­பூ­ரா­கவும்  கட­மையில் ஈடு­ப­டுத்­தி­யுள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

ஆண்டின் அதி­கூ­டிய நோயா­ளர்கள் எண்­ணிக்கை பதி­வாகிய ஆண்­டாக இந்த ஆண்டு கரு­தப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் டெங்கு நோயை கட்­டுப்­ப­டுத்த   சகல விதங்களிலும் அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்து வரும் நிலையில் பொது­மக்கள் தமது சூழலை சுத்­த­மாக வைத்­தி­ருக்க தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தியும் வரு­கின்­றது. 

நாட்டில் டெங்கு பரவல் அதி­க­ரித்­து­வரும் நிலையில் சுகா­தார அமைச்சு மற்றும் அரச  நிறு­வ­னங்­களை இணைத்­துக்­கொண்டு அர­சாங்கம் விரை­வான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தாக குறிப்­பிட்­டுள்­ளது.  

குறிப்­பாக  நீர்­கொ­ழும்பு, தலங்­கம, வேதர, பாணந்­துறை மற்றும் ஐ.டி.எச். ஆகிய வைத்­தி­ய­சா­லை­களில் டெங்கு சிசிச்­சைக்­கான விசேட பிரி­வுகள் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளன. அதேபோல் டெங்கு பரவல் கார­ண­மாக நாளாந்தம் தேசிய வைத்­தி­ய­சா­லையை நாடும் நோயா­ளர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்துச் செல்­வதன் கார­ண­மாக டெங்கு சிகிச்­சைக்­கான விசேட பிரி­வு­களை ஸ்தாபிக்க அமைச்சு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. 

இதே­வேளை  டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் நிலவும் பகு­தி­களில் நுளம்புப் பெருக்கம் தொடர்­பி­லான அறிக்­கை­களை பெற்றுக் கொள்­வ­தற்கும் சுகா­தார அமைச்சு தீர்­மா­னித்­துள்­ளது. அந்­த­வ­கையில் நுளம்பு குடம்­பிகள் தொடர்­பி­லான ஆராய்ச்சி உத்­தி­யோ­கத்­தர்­களை ஈடு­ப­டுத்­தி­யுள்­ள­தாக அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

பாட­சா­லைகள், வேலைத்­த­லங்கள், மதஸ்­த­லங்கள் மற்றும் ஏனைய நிறு­வன  வளா­கங்­களில் 60 வீத­மான நுளம்பு பெருக்கம் பதி­வா­கி­யுள்­ளது. எஞ்­சிய 40 வீத­மான நுளம்புப் பெருக்கம் குடி­யி­ருப்­புக்­களை அண்­மித்துக் காணப்­ப­டு­வ­தா­கவும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.  மேலும் டெங்கு பர­வலை கட்­டுப்­ப­டுத்தும் மருந்து வகை­களை கியூபா மற்றும் ஜெர்­மனி ஆகிய நாடு­களில் இருந்து பெற்­றுக்­கொள்ளும் நட­வ­டிக்­கைகள் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

டெங்கு நோயா­ளர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்ள நிலையில் டெங்கு சிகிச்­சை­க­ளுக்­காக பயன்படுத்தும் டெக்ஸ்ட்ரன் சேலைன் வகையை தாய்லாந்திலிருந்து கொண்டுவருவதற்கும் சுகாதார அமை ச்சு  தீர்மானித்துள்ளது. இதற்காக தாய் லாந்து அரசாங்கம் தமது விருப்பத்தை தெரிவி த்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.