கொழும்பு மாந­க­ரத்தில் குவித்து வைக்­கப்­பட்டிருந்த குப்­பைகள் தற்­ச­மயம் துரித கதியில் அகற்­றப்­பட்டு வரு­கின்­றன.  இது தொடர்பில் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தலை­மையில் செயற்­படும் செய­லணி இந்த பணி­களை கண்­கா­ணித்து வரு­கின்­றது. இந்த செய­ல­ணியில் மேல்­மா­கா­ண­சபை உறுப்­பினர் குரு­சா­மியை, என் சார்­பாக நிய­மித்­துள்ளேன் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எனவே கொழும்பு மாந­கர பகு­தியில் குப்­பைகள் இன்­னமும் அகற்­றப்­ப­டாத இடங்கள் இருக்­கு­மாயின் அவற்றை உட­ன­டி­யாக 0777372640 என்ற இலக்­கத்­துடன் மூலம் தொடர்பு கொண்டு,  மேல்­மா­கா­ண­சபை உறுப்­பினர் குரு­சா­மி­யிடம் அறி­விக்­கலாம்.  இதற்கு மேல­தி­க­மாக வட­கொ­ழும்பு- மத்­திய கொழும்பு கொழும்பு பிர­தேச செய­லக வல­யத்தில் பகு­தியில் குப்பை அகற்றும் மற்றும் சேக­ரிக்கும் விவ­கா­ரங்கள் தொடர்­பாக மக்­களை தெளி­வுப்­ப­டுத்தும்  செயற்­திட்டம் மற்றும் சிர­ம­தான பணி­களும் எதிர்­வரும் 16ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று முன்­னெ­டுக்­கப்­படும். 

இதில் ஜன­நா­யக மக்கள் முன்­னணி மாகா­ண­சபை உறுப்பினர்கள், முன்னாள் மாநகரசபை உறுப்பினர்கள், ஜனநாயக இளைஞர் இணைய அங்கத்தவர்கள் கலந்துக்கொள்வார்கள்.