உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு  ஐக்­கி­ய­நா­டு­களின் மனித உரிமை மற்றும்  பயங்­க­ர­வா­தத்தைக் கட்­டுப்­ப­டுத்தும் நட­வ­டிக்கை தொடர்­பான  விசேட  நிபுணர் பென் எமர்சன்  எதிர்­வரும் 10 ஆம்­தி­கதி  இலங்கை வரு­கிறார். 

எதிர்­வரும் 14 ஆம்­தி­கதி வரை இலங்­கையில் தங்­கி­யி­ருக்கும்  ஐ.நா. நிபுணர் பயங்­க­ர­வாத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் மற்றும் அவை எவ்­வாறு  மனித உரி­மையை ஊக்­கு­விப்­ப­திலும் பாது­காப்­ப­திலும் தாக்கம் செலுத்­து­கின்­றன என்­பதை ஆராய்ந்து பார்க்­க­வுள்ளார்.  

இந்த விஜ­யத்தின் போது  வெளி­வி­வ­கார அமைச்சர் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர், நீதி அமைச்சர், பாது­காப்பு அமைச்சர், நிதி அமைச்சர், சிறை­சாலை மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் உள்­ளிட்ட பல்­வேறு அரச தரப்பு முக்­கி­யஸ்­தர்­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். அத்­துடன் சட்­டத்தை  அமுல்­ப­டுத்தும் நிறு­வ­னங்கள்   பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்  தேசிய பொலிஸ் ஆணைக்­குழு பிர­தி­நி­திகள், மனித  உரிமை ஆணைக்­குழு முக்­கி­யஸ்­தர்கள் ஆகி­யோரை சந்­தித்துப் பேச்சு நடத்­த­வுள்ளார். அத்­துடன் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளையும் சந்­திக்­க­வி­ருக்­கிறார். 

 மேலும் இலங்கை அர­சாங்­கத்தின் அழைப்பின் பேரில் வருகை தரும்  ஐ.நா. விசேட நிபுணர்  பென் எமர்சன்  இலங்­கை­யி­லுள்ள சர்­வ­தேச தரப்­பி­ன­ரையும் சந்­தித்துப் பேச­வுள்ளார்.  எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை 14 ஆம்­தி­கதி ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்து தனது விஜயம்  தொடர்பில் கருத்து  வெளி­யி­ட­வுள்ள  எமர்சன்  எதிர்­வரும் 2018 மார்ச் மாதம்   தனது பரந்­து­பட்ட அறிக்­கையை   ஐ.நா. மனித உரிமை பேர­வையின்  37 ஆவது அமர்வில் சமர்ப்­பிக்­க­வுள்ளார்.  

இலங்­கையின் பயங்­க­ர­வாத  தடுப்பு தொடர்­பான  நட­வ­டிக்­கை­களை  நான் ஆரா­ய­வுள்ளேன்.  இது­தொ­டர்­பான சட்­ட­வ­ரை­பு­களை   பார்க்­க­வி­ருக்­கின்றேன்.   அதா­வது அர­சாங்கம் முன்­னெ­டுக்கும்  இது தொடர்­பான நட­வ­டிக்­கைகள் சர்வதேச மனித சட்டத்துடன் பொருந்துகின்றனவா என்பதை ஆராய்ந்து பார்க்கவுள்ளேன் என்று  தனது இலங்கை விஜயம் தொடர்பில்  ஐக்கியநாடுகளின் விசேட நிபுணர் பென் எமர்சன் தெரிவித்திருக்கிறார்.