தொழுகையில் ஈடுபடுவதற்கு தினசரி இரு தடவைகள் நேர அட்டவணைப் பிரகாரமின்றி 5 நிமிட பணி விடுப்பை எடுப்பதை முஸ்லிம் தொழிலாளர்கள் தொடரும் பட்சத்தில் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவித்ததன் மூலம் அமெரிக்க விஸ்கொன்ஸின் மாநிலத்திலுள்ள.நிறுவனமொன்று கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

மேற்படி ஏரியன்ஸ் மின்சக்தி நிறுவனத்தின் அறிவிப்பால் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் 53முஸ்லிம் தொழிலாளர்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய விதிகளின் பிரகாரம் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட பணி இடைவேளை நேரங்களில் மட்டுமே அங்கு பணியாற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் தொழுகையில் ஈடுபட அனுமதிக்கபடவுள்ளது.

"பணி நேரத்தில் தொழுகையில் ஈடுபடுவதால் உற்பத்தி பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. நீங்கள் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டுமானால் அதனை உங்கள் உணவு இணைவேளையின் போது செய்யுங்கள்" என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இது இன வேறுபாட அடிப்படையிலான நடவடிக்கை என முஸ்லிம் பணியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் அந்த நிறுவனம் இதற்கு முன்னர் தன்னால் பின்பற்றப்பட்டு வந்த கொள்கையைப் பின்பற்றி முஸ்லிம்கள் தமது பணி நேரத்தில் தொழுகையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என அமெரிக்க இஸ்லாமிய உறவுகள் சபை வலியுறுத்தியுள்ளது.