எனது அமைச்சை ஜனாதிபதி கேட்டால் கொடுக்கத் தயார் : சாகல ரத்­நா­யக்க

Published By: Robert

07 Jul, 2017 | 09:51 AM
image

அழுத்­தங்கள் இன்றி நான் சுயா­தீ­ன­மா­கவே சட்டம் ஒழுங்கு அமைச்சின் கட­மை­களை முன்­னெ­டுக்­கின்றேன். ஜனா­தி­பதி என்­னிடம் இருந்து அமைச்சைப் பொறுப்­பேற்று வேறு அமைச்சுப் பொறுப்பில் என்னை கடமை செய்­யு­மாறு பணிப்­பா­ரானால் அது தொடர்பில் எனக்கு ஆட்­சே­பணை இல்லை. அந்த அமைச்­சிலும் இதே போன்று சிறப்­பாக சேவை­களை முன்­னெ­டுப்பேன் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க தெரி­வித்தார்.

அலரி மாளி­கையில்  நேற்று நடைபெற்ற சார்க் நாடு­களின் சட்டம் ஒழுங்கு அமைச்­சர்­களின் கூட்டம் தொடர்பில் விளக்­க­ம­ளிக்கும் ஊடக்­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொன்டு ஊடக்­வி­ய­லா­ளர்­களின் கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மைதி­ரி­பால சிறி­சேன அமைச்­ச­ரவை கூட்­டத்தின் போது பொலி­ஸாரின் நட­வ­டிக்கை தொடர்பில் கார­சா­ர­மாக விமர்­சித்­தி­ருந்தார். குரிப்­பாக ஊழல் ஒழிப்பு தொடர்பில் இடம்­பெறும் விசா­ர­ணைகள் சரி­யாக இடம்­பெ­ற­வில்லை என ஜனா­தி­பதி குற்றம் சுமத்தி இருந்­த­துடன் பொலிஸ் தினைக்­க­ளத்தை மூன்று மாதத்­துக்கு தன்­னிடம் ஒப்­ப­டைத்தால் குற்ற­வா­ளிகள் அனை­வ­ரையும் கைது செய்து காட்­டு­வ­தா­கவும் கூறி­யி­ருந்தார்.

இது தொடர்பில் கேட்ட போதே இந்த பதிலை அளித்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க,  அது தொடர்பில் மேல­திக கேள்­வி­களை கேட்க முற்­பட்ட போது அதி­லி­ருந்து நழுவி பிறிதொரு ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்வதாகவும் அதில் கேள்விகளுக்கு பதிலளிப்பதாகவும் கூறிவிட்டு சென்ரார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41