ஜனா­தி­ப­தியின் தலை­யீட்­டினால் பிர­த­ம­ருக்கு வலி­யு­றுத்­தப்­பட்­ட­மைக்கு அமை­யவே காணா­ம­லாக்­கப்­ப­டு­வதில் இருந்து ஆட்­களை பாது­காப்­ப­தற்­கான சர்­வ­தேச சம­வாய சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்கும் நட­வ­டிக்கை தடுக்­கப்­பட்­டது. மக்­களின் ஆணை­யையும் மகா­நா­யக்க தேரர்­களின் நிலைப்­பாட்­டையும் மீறி அர­சி­ய­ல­மைப்பு வரப்­போ­வ­தில்லை என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தெரி­வித்­தது. 

சர்­வ­தேச விசா­ர­ணையை நிரா­க­ரிப்­பதும் இரா­ணு­வத்தை பலப்­ப­டுத்­து­வ­துமே கட்­சி­யி­னதும் ஜனா­தி­ப­தி­யி­னதும் உறு­தி­யான நிலைப்­பாடு எனவும்  அக்­கட்சி குறிப்­பிட்­டது .  

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் வாராந்த செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் துறை­முக அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான மஹிந்த சம­ர­சிங்க மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், 

நாட்டின் தேசிய பாது­காப்பு மற்றும் ஒரு­மைப்­பாடு  ஆகிய பிர­தான விட­யங்­களில் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி எப்­போதும் அதிக அக்­க­றை­யுடன் செயற்­பட்டு வரு­கின்­றது. இப்­போதும் பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வர முயற்­சித்த காணா­மா­லாக்­கப்­ப­டு­வதில் இருந்து ஆட்­களை பாது­காப்­ப­தற்­கான சர்­வ­தேச சம­வாய சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரப்­ப­டாது தடுக்­கப்­ப­டவும் எமது தலை­யீ­டு­களே முக்­கி­ய­மா­ன­வை­யாகும். சர்­வ­தேச சம­வாயம்  ஒன்றில் நாம் கைச்­சாத்­திட முன்னர் முதலில் தீர்­மா­னங்­களை எடுக்க வேண்டும். 

நாட்டில் எவ்­வா­றான கருத்து நில­வு­கின்­றது என்­பதை ஆராய்ந்த பின்­னரே சர்­வ­தேச சம­வாயம் ஒன்றில் கைச்­சாத்­திட வேண்டும். எனினும் இவ்­வாறு சர்­வ­தேச சம­வாயம் ஒன்­றுக்கு  இணங்­கு­வது இது முதல் சந்­தர்ப்பம் அல்ல. ஜி.எஸ்.பி பெற்­றுக்­கொள்ள 27 உடன்­ப­டிக்­கை­களை இலங்கை ஏற்­றுக்­கொண்­டது. இது எமது அர­சாங்­கத்தில் தெரி­வித்த இணக்­கப்­பாடு அல்ல. முன்­னைய அர­சாங்கம் செய்­து­கொண்ட உடன்­ப­டிக்­கை­யாகும். இப்­போதும் வெளி­வி­வ­கார அமைச்சர் இதனை செய்­துள்ள போதிலும் யார் மீதும் குறை­கூற நாம் தயா­ராக இல்லை. அர­சாங்­க­மாக அனை­வரும் பொறுப்­புக்­கூற வேண்டும். 

மேலும் காணா­மா­லாக்­கப்­ப­டு­வதில் இருந்து ஆட்­களை பாது­காப்­ப­தற்­கான சர்­வ­தேச சம­வா­யத்தில் 93 நாடுகள் கைச்­சாத்­திட்­டுள்­ளன . 53 நாடுகள் இன்னும் தமது கைச்­சாத்தை உறு­திப்­ப­டுத்த வேண்­டிய நிலையில் உள்­ளன.  அதேபோல் பிர­பல்­ய­மான சில நாடுகள் இந்த சம­வா­யத்தில் கைச்­சாத்­தி­டாதும் உள்­ளன . எனவே நாம் அனைத்­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.  

எவ்­வாறு இருப்­பினும் காணா­மா­லாக்­கப்­ப­டு­வதில் இருந்து ஆட்­களை பாது­காப்­ப­தற்­கான சர்­வ­தேச சம­வா­யத்தில் இலங்கை கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி கைச்­சாத்­திட்­டது. மீண்டும் 2016ஆம் ஆண்டு மே 25ஆம் திகதி மீள் உறு­தியும் செய்­துள்­ளது. 

அதன் பிர­காரம்  காணா­மா­லாக்­கப்­ப­டு­வதில் இருந்து ஆட்­களை பாது­காப்­ப­தற்­கான சர்­வ­தேச சம­வாய சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வர கட­மைப்­பட்­டுள்ளோம். எனினும் இப்­போது இது கால­வ­ரை­யின்றி பிற்­போ­டப்­பட்­டுள்­ளது. 

ஜனா­தி­பதி ஆரம்­பத்தில் இருந்தே இதனை கொண்­டு­வர வேண்டாம் என்ற நிலைப்­பாட்டில் தான் எம்­மிடம் கலந்­து­ரை­யா­டினார். அதன் பின்னர் மகா­நா­யக்க தேரர்­களின் கருத்­துக்­களும் மக்­களின் நிலைப்­பாடும் ஒரே வித­ம­ன­தாக அமைந்­துள்­ளதால் இந்த சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரப்­பட வேண்­டி­யதன் அவ­சியம் தொடர்பில் ஆழ­மாக ஆராய வேண்­டிய தேவை இருந்­தது.

எவ்­வா­றா­யினும் நாம் மகா­நா­யக்க தேரர்­களின் நிலைப்பாட்டை மீறி எந்த வேலைத்திதிட்டங்களையும் முன்னெடுக்க தயாராக இல்லை. அதேபோல் எமது இராணுவத்தை தண்டிக்கும் வகையிலோ அல்லது காட்டிக்கொடுக்கும் வகையிலோ எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது. அத்துடன் சர்வதேச விசாரணைகளுக்கு ஒருபோதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இடமளிக்கப்போவதில்லை. ஜனாதிபதி தலையீட்டின் மூலமாக பிரதமருக்கு வலியுறுத்தப்பட்ட நிலையில் இவை தடுக்கப்பட்டுள்ளன என்றார்.