பணியாளர் பற்றாக்குறையானது வினைத்திறனான புகையிரதச் செயற்பாடுகளுக்கு இடையூறு - தம்மிக்க ஜயசுந்தர

Published By: Vishnu

27 May, 2025 | 08:08 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புகையிரத திணைக்களத்தில் நிலவும் ஆளணி பற்றாக்குறையால் புகையிரத சேவையை வினைத்திறனான வகையில் முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.; 430 புகையிரத சாரதிகளுக்கான கேள்வி காணப்படுகின்ற நிலையில் தற்போது 275 சாரதிகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுகின்றனர். பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காண வேண்டுமாயின் ஆளணி பற்றாக்குறைக்கு உடன் தீர்வுகாண வேண்டும் என புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

புகையிரத திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

திணைக்களத்தில் நிலவும் ஆளணி பற்றாக்குறைக்கு தீர்வு காணும் பொருட்டு ஆட்சேர்ப்புக்கு அனுமதி வழங்காத காரணத்தால் புகையிரத சேவையை தடையின்றி வினைத்திறனாக  முன்னெடுப்பதில் பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன.

வரையறுக்கப்பட்ட ஆட்சேர்ப்புக்கு கடந்த மார்ச் மாதம் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்  அதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.தற்போது சேவையில் ஈடுபடும் 275 சாரதிகள்  பொதுவான சேவை கட்டமைப்புக்கு மாறாக நாளொன்றுக்கு அதிகளவான புகையிரத பயண சேவையில் ஈடுபட வேண்டிய நிலை காணப்படுகிறது.ஏதேனும் சந்தர்ப்பத்தில் இவர்கள் விடுமுறையில் சென்றால் புகையிரத சேவையை தடையின்றி முன்னெடுப்பதில் பாரிய சிக்கல் ஏற்படுகிறது.

 20 புகையிரத சாரதிகள் நேற்று முன்தினம் சுகயீன விடுமுறையில் சென்றதால் புகையிரத சேவை பாரிய நெருக்கடியை எதிர்கொண்டது.இதனால் புகையிரத சேவைகள் பல இரத்துச் செய்யப்பட்டதுடன், தாமதமடைந்தன.இந்த பிரச்சினைகளுக்கு  நிலையான தீர்வு காண வேண்டுமாயின் ஆளணி பற்றாக்குறைக்கு தீர்வு காண வேண்டும் என்பதை போக்குவரத்து அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை;...

2026-07-14 11:31:55
news-image

மத்தள விமான நிலையத்தை நிர்வகிக்க 19...

2026-07-14 11:31:37
news-image

இலங்கையில் பயணிகளை ஏற்றிச்செல்ல ட்ரோன் சேவை...

2026-07-14 11:26:29
news-image

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தில் பறந்த ட்ரோன்...

2026-07-14 11:14:47
news-image

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை ஆண்டிறுதிக்குள்...

2026-07-14 10:45:46
news-image

ஜனாதிபதி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை...

2026-07-14 10:47:25
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரான்ஸ் முக்கிய...

2026-07-14 10:22:54
news-image

2026ஆம் ஆண்டின் உலகின் சிறந்த 50...

2026-07-14 10:35:12
news-image

போக்குவரத்து அபராதம் செலுத்துமாறு வரும் போலி...

2026-07-14 10:21:51
news-image

அம்பாறையில் தேங்காய் நார் தொழிற்சாலையில் பாரிய...

2026-07-14 10:00:06
news-image

போதைப்பொருள், கண்ணிவெடிகள் உள்ளிட்ட பொருட்களுடன் இளைஞன்...

2026-07-14 10:47:49
news-image

போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண் கைது!

2026-07-14 09:47:43