நுவரெலியாவில் இயற்கை அழகின் மையப்பகுதியாக திகழும் “கிரெகரி நீர்த்தேக்கம்!”

27 May, 2025 | 06:37 PM
image

(மனோகரன் பிரியங்கா)

"Little England” என்று அழைக்கப்படும் நுவரெலியாவில் இயற்கையின் கை வண்ணத்தால்  வடிவமைக்கப்பட்டது போல தோன்றும் நுவரெலியாவின் கிரெகரி நீர்த்தேக்கம் (Gregory Lake) இலங்கையின் உயர்வான குளிர்பதத்தில் தங்கியிருக்கும் ஒரு கலைப்பொக்கிஷமாகும். மனிதனால் உருவாக்கப்பட்ட  இந்த செயற்கை நீர்த்தேக்கம் இன்று சுற்றுலாப் பயணிகள் மட்டுமன்றி, இயற்கை நேசர்களின் மனதையும் வென்றுள்ளது.  

பசுமையான சூழல், மலர்கள், குளிர்ந்த காற்று, மற்றும் நீர்த்தேக்கத்தின் மேல் பிரதிபலிக்கும் சூரிய ஒளி ஆகியவை இந்த நீர்த்தேக்கத்தை அற்புதமாக மாற்றுகின்றன.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆளுநராக இருந்த Sir William Gregoryயால் 1873ஆம் ஆண்டு இந்த நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. இதனால் இந்த நீர்த்தேக்கம் Gregory (கிரெகரி)  என்று அழைக்கப்படுகிறது.

இங்கு மின்சார படகு, மோட்டார் படகு, பெடல் படகு என பல வகை படகுகளில்  சவாரி, குதிரை சவாரி என பல சுவாரஸ்யமான அம்சங்கள் இரசிக்கத்தக்கதாக அமைகின்றன.

மேலும் Gregory (கிரெகரி) நீர்த்தேக்கத்தை சுற்றி சிறுவர் விளையாட்டுப் பூங்காவும் உள்ளது. இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கான வசதிகளும் உள்ளன.

அதனுடன், அப்பகுதியின் சுற்றுப்புறம் தூய்மையாக பராமரிக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடமாக இருக்கிறது.

மேலும், இது குளிர்ச்சியான வானிலையை கொண்டிருப்பதால், Gregory (கிரெகரி) நீர்த்தேக்கம் அழகு, அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த இடமாக திகழ்கிறது.

Gregory (கிரெகரி) நீர்த்தேக்கம் என்பது ஒரு சுற்றுலாத் தளமாக இருந்தாலும், சில கட்டுப்பாடுகளுடன் மீன்பிடி செயற்பாடுகளும் அங்கு அனுமதிக்கப்படுகிறது. குறிப்பாக உள்ளூர் மீனவர்கள் மற்றும் சட்ட ரீதியான அனுமதியுடன் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் சில நேரங்களில் இந்த நீர்த்தேக்கத்தில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

பொதுவாக இந்த செயல்கள் சுற்றுச்சூழலை பாதிக்காமல், இயற்கையை பாதுகாப்பதற்கான விதிமுறைகளுடனே நடத்தப்படுகின்றன. சில சமயங்களில் சுற்றுலா பயணிகளுக்கான விளையாட்டு மீன்பிடி (recreational fishing) வாய்ப்புகளும் Gregory (கிரெகரி) நீர்த்தேக்கத்தில் வழங்கப்படுகின்றன. ஆனால், அதற்கு நகர சபையின் அனுமதி அவசியம்.

Gregory (கிரெகரி) நீர்த்தேக்கத்தை சுற்றி இருக்கும் அமைதி, பசுமை, மற்றும் குளிர்ச்சியான வானிலை இந்த மீன்பிடி செயலை மேலும் அனுபவமிக்கதாக மாற்றுகின்றன.

பலர் இது குறித்து தெரியாமலே அங்கிருந்து செல்கிறார்கள். Gregory (கிரெகரி)  நீர்த்தேக்கம் இயற்கையையும் மன அமைதியையும் விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக சென்று அனுபவிக்கவேண்டிய ஓர் அழகான இடமாகும்.

மேலும் இந்த நீர்த்தேக்கத்தின் அருகில் பலரின் மனதை ஈர்க்கும் வகையில் திறந்தவெளி உடற்பயிற்சி நிலையம் காணப்படுகிறது. 

நுவரெலியா நகர மக்களினதும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளினதும் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக நுவரெலியா மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட  இந்த திறந்தவெளி உடற்பயிற்சி நிலையம் 2021ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.

Gregory (கிரெகரி) நீர்த்தேக்கம் என்பது இயற்கைச் செழிப்பையும் வரலாற்றுப் பெருமையையும் ஒரே நேரத்தில் காணக்கூடிய ஓர் அரிய இடமாக திகழ்கிறது.

சுற்றுலா பயணிகள், உள்ளூர்வாசிகள், குழந்தைகள் என அனைவருக்கும் இங்கு ஒரு சிறப்பான அனுபவம் காத்திருக்கிறது.  இயற்கையை நேசிக்கிறவர்களும், ஓர் அமைதியான இடத்தில் மனதிற்கு மகிழ்ச்சியை தேடுபவர்களும் Gregory (கிரெகரி) நீர்த்தேக்கத்தை ஒரு முறை கண்டிப்பாக சந்திக்க வேண்டியது அவசியம்.

Gregory (கிரெகரி) நீர்த்தேக்கம் போன்ற இயற்கை வளங்களை நாம் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இங்கு வருகை தரும் அனைவரும் சுத்தத்தையும் அமைதியையும் பேண வேண்டும்.

சுற்றுச்சூழலை காக்கும் வகையில் குப்பைகளை தூக்கி எறிவதை தவிர்க்க வேண்டும். இயற்கை அழகு அழிக்கப்படாமல், எதிர்காலத் தலைமுறைகளுக்கும் இதேபோல் அனுபவிக்க வாய்ப்பு அமைவதற்காக நாம் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

Gregory (கிரெகரி) நீர்த்தேக்கத்தின் பிரம்மாண்டம், பசுமையான சூழல் மற்றும் காற்று இவை அனைத்தும் இயற்கையின்  பரிசுகள். அது நம் மனதிற்கும் இயற்கைக்குமான உறவின் பிரதிபலிப்பு. அதைப் பேணிக் காப்பது ஒவ்வொரு நபரின் கடமையாக இருக்க வேண்டும். இது நம் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, புவியின் சுவாசத்துக்கு வழிவகுக்கும் ஒரு செயல்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்திசாலி யானைகள் : வைரலாகும் வீடியோ

2025-06-12 19:09:30
news-image

மன்னாரில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான...

2025-06-09 14:07:39
news-image

கடலும் காடும் கலந்த “ஆழிவனம்” 

2025-06-09 14:10:39
news-image

ரயிலுக்குள் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன்...

2025-06-07 12:57:45
news-image

29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்தடை குறித்து...

2025-05-30 14:45:05
news-image

அமானுஷ்யங்கள் நிறைந்த ஜப்பானின் “தற்கொலை காடு”

2025-05-28 16:57:48
news-image

நுவரெலியாவில் இயற்கை அழகின் மையப்பகுதியாக திகழும்...

2025-05-27 18:37:56
news-image

பொலிஸ் அதிகாரியை தாக்கிய “குற்றவாளி” பூனை...

2025-05-24 18:09:10
news-image

ஒரே இடத்தில் மூன்று இயற்கை அற்புதங்கள்!...

2025-05-19 17:24:17
news-image

‘வலையில் கண்ட முகம்…’ யார் இந்த...

2025-05-16 16:58:29
news-image

`நாடாகவே' அங்கீகரிக்கப்படாத நாடுகள்

2025-05-16 13:34:10
news-image

தாஜ்மகாலை தன்னந்தனியாகச் சுற்றி பார்க்க முடியுமா?

2025-05-13 10:42:50