பஞ்சு போன்ற ரவா இட்லி செய்வது எப்படி?

27 May, 2025 | 05:57 PM
image

பஞ்சு போன்ற ரவா இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்......

தேவையான பொருட்கள்:

  • ரவை - 2 கப்
  • எண்ணெய் - 3 தேக்கரண்டி
  • கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
  • சீரகம் - 1 தேக்கரண்டி
  • கடுகு - 1 தேக்கரண்டி
  • இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
  • பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
  • கறிவேப்பிலை நறுக்கியது
  • பெருங்காயத்தூள் -1/4 தேக்கரண்டி
  • வறுத்த முந்திரி பருப்பு
  • தயிர் - 2 கப் 
  • உப்பு - 1 தேக்கரண்டி
  • ஈனோ - 1 தேக்கரண்டி
  • தண்ணீர்

செய்முறை:

1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, சீரகம், கடுகு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

2. பின்பு பெருங்காயத்தூள், ரவை சேர்த்து கலந்து பிறகு வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து கலந்து விடவும்.

3. பாத்திரத்தில் ரவை கலவை மற்றும் தயிர் சேர்த்து கலந்து விடவும்.

4. பின்பு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.

5. பிறகு ஈனோ மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்துவிடவும்.

6. இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதில் தயார் செய்த மாவை ஊற்றி மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.ரவா இட்லி தயார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right