ராகு பகவானை போல் கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லை' என்பது ஆன்றோர் வாக்கு. நிழல் கிரகமான ராகு பகவான் ராகு பகவானின் அருளைப் பெற வேண்டும் என்றால் ராகு காலத்தில் பிரத்யேகமான தருணத்தில் வழிபட வேண்டும். இது தொடர்பாக ஆன்மீக முன்னோர்கள் மற்றும் ஜோதிட நிபுணர்கள் சுட்டிக் காட்டும் சூட்சமத்தை கீழே காணலாம்.
பன்னிரண்டு லக்னக்காரர்களும் நாளாந்தம் ராகு கால தருணத்தில் ராகு பகவானின் காயத்ரியையோ அல்லது உங்களுக்கு பிடித்த இறைவனின் மந்திரத்தையோ உச்சரித்தாலும் உங்களுக்கான சுப பலன் கிடைக்கும்.
ராகு காலம் ஒன்றரை மணி தியாலம் என்பதும்.. இதில் இறுதி முப்பது நிமிடங்கள்தான் ராகு பகவான் காட்சி அளித்து அருள்பாலிப்பார் என்பதால் இறுதி முப்பது நிமிடத்தில் விளக்கேற்றி ராகு பகவானிடம் பிரார்த்திக்க வேண்டும்.
அப்போது கேட்கும் வரங்களை தான் ராகு பகவான் வழங்குவார். உதாரணமாக திங்கட்கிழமைகளில் காலை ஏழரை மணி முதல் ஒன்பது மணி வரை ராகு காலம் என்றால் நீங்கள் எட்டு முப்பது முதல் ஒன்பது மணிக்குள் ஆலயத்திற்குச் சென்று ராகு பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வரம் கேட்டால் அவர் அருள் புரிவார்.
திருமணத்திற்காக காத்திருக்கும் இளம் பெண்களும், ஆண்களும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் நவகிரகத்தில் உள்ள ராகு பகவானை 11:30 முதல் 12 மணிக்குள்ளாக தீபம் ஏற்றி வழிபட்டால் விரும்பிய வரன் கிடைக்கும்.
காரிய வெற்றி மற்றும் பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும் என்றால் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் நவ கிரகத்தில் உள்ள ராகு பகவானுக்கு ஐந்து முப்பது மணி முதல் 6:00 மணிக்குள்ளாக தீபம் ஏற்றி வழிபட்டால் பலன் உண்டு.
தொகுப்பு: சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM