களனிப்பகுதியில் உயிரிழந்த நாயொன்றுக்கு மரணச்சடங்கு செய்யப்பட்டுள்ளது.

மனிதர்கள் உயிரிழக்கும் போது நடைபெறும் மரணச் சடங்கு போன்று, குறித்த நாய்க்கும் மரணச்சடங்கு நடத்தப்பட்டுள்ளது.

இளைஞர் பாராளுமன்ற பிரதி பிரதமராக செயற்படும் மலித் சுதுசிங்க என்பவரின் செல்லப்பிராணியான மிஷெல் என்ற நாய்க்கே இவ்வாறு மரணச் சடங்கு நிகழ்த்தப்பட்டுள்ளது.

மலித் சுதுசிங்கவினால் வளர்க்கப்பட்ட ஆறு வயது நிரம்பிய மிஷெல் என்ற நாய் சிறுநீரகம் பாதிப்படைந்தமையினால் உயிரிழந்துள்ளது.

இந்நிலையில் மனிதர்களுக்கு இணையாக நாய்க்கும் மரணச் சடங்கு உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.