கடற்தொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் இலங்கை கடற்பரப்பில் இழுவை மடி மீன்பிடி முறைமையைப் முன்னெடுப்பவர்களுக்கு எதிராக  50000 ரூபாவாக தண்டப் பணம் விதிக்கவுள்ளோம். தேவைப்படின் இரு வருட சிறை தண்டனையை வழங்க முடியும் என கடற்தொழில் மற்றும் மீன்பிடி துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

எமது நிபந்தனைகளை பூரணமாக ஏற்காத வரைக்கும் இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க மாட்டோம். நாளை தினம் இந்திய மீனவர்கள் அத்துமீறினாலும் உடன் கைது செய்யப்படுவார்கள். 

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க இடமளிக்க மாட்டோம். இதனை தடுக்க கடற்படைக்கு பூரண அதிகாரம் வழங்கியுள்ளோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டதோடு வடமாகாண மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வளிப்பதற்காகு பிரதான இடத்தினையும் வழங்கியுள்ளோம் என்றார்.

பாராளுமன்றத்தில் வியாழகிழமை கடற்தொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் திருத்த சட்டமூலத்தினை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.