இந்தியாவின் முன்னணி பொதுத்துறை சுரங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்ட பேராளர்கள் குழுவொன்று, இந்திய அரசின் சுரங்கங்கள் அமைச்சகத்தின் தலைமையில், மே 20 முதல் 22 வரை இலங்கைக்கு விஜயம் செய்தனர்.
சுரங்கங்கள் மற்றும் கனிமத் துறையில் இருநாட்டு ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இவ்விஜயத்தின் போது, இந்திய பேராளர்கள் குழு, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தியை சந்தித்து கலந்துரையாடினர்.
மேலும், Kahatagaha Graphite Lanka Ltd., Lanka Mineral Sands Ltd., புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB), மற்றும் Lanka Phosphate Ltd. உள்ளிட்ட இலங்கை அரசின் சொத்துக்களாக உள்ள முக்கியமான கனிம நிறுவனங்களின் தலைவர்களுடன் சந்திப்புகள் நடைபெற்றன.
இதேபோல், முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் (BOI) பணிப்பாளர் நாயகம் மற்றும் பிற முக்கிய அரச அதிகாரிகளுடனும் உரையாடல்கள் நடைபெற்றன.
முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்தல், சுரங்க தொழில்நுட்பங்களில் நவீன தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் கனிமத் துறையில் பெறுமதிசேர் கூட்டு முயற்சிகள் குறித்து கலந்துரையாடுதல் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
இவ்விஜயம், 2025 பெப்ரவரி 15ஆம் திகதி இந்தியா – இலங்கை அமைச்சர்கள் இடையே புதுடெல்லியில் நடைபெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. அதன் பின்னர், மார்ச் 10ஆம் திகதி இருநாட்டு அமைச்சக செயலாளர்கள் இடையே மெய்நிகர் சந்திப்பும் நடைபெற்றது.
இந்திய பேராளர்கள், இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக இலங்கையில் உள்ள முக்கிய சுரங்க வளாகங்களுக்கும் நேரில் விஜயம் மேற்கொண்டு, செயற்பாட்டு சூழல்களைக் கவனித்தனர்.























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM