சிம்பாப்வே அணிக்கெதிரான 3 ஆவது போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2:1 என முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது.

காலியில் இடம்பெற்ற முதலிரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்று 1:1 என்ற புள்ளிகள் அடிப்படையில் சமநிலை பெற்றிருந்த நிலையில் இன்று இடம்பெற்ற 3 ஆவது போட்டியில்இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரில் 2:1 என முன்றிலை பெற்றுள்ளது.

இன்றைய 3 ஆவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி  50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 310 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் சிம்பாப்வே அணி சார்பாக மசகட்சா 111 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக வனிது ஹசரங்க மற்றும் அசேல குணவர்தன ஆகியோர் தல 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

311 என்ற இமாலய இலக்கை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களின் அதிரடியில் இலங்கை அணி 16 பந்துகள் மீதமிருக்க 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்து 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது இலங்கை அணி.

இதன்போது இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியுார் தமது கன்னிச் சதத்தைப் பூர்திசெய்தனர்.

நிரோஷன் டிக்வெல்ல 116 பந்துகளில் 102 ஓட்டங்களையும் குணதிக்க 111 பந்துகளில் 116 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.