இன்றைய திகதியில் பல்வேறு மாசு காரணமாக பிறக்கும் பிள்ளைகளில் பத்தில் இருவருக்கு பிறவி குறைபாடுகள் ஏற்படுகிறது.
இதனால்தான் வைத்தியர்கள் கருவுற்றிருக்கும் பெண்மணிகள் இடத்தில் பல்வேறு வகையான பரிசோதனைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கிறார்கள்.
குறிப்பாக அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலம் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏதேனும் வளர்ச்சி தொடர்பான பாதிப்பு இருக்கிறதா? என கண்டறியப்படுகிறது.
இந்த வகையில் பிள்ளைகள் பிறந்தவுடன் ஏதேனும் ஆரோக்கிய பாதிப்பு இருக்கிறதா? என பரிசோதனை மேற்கொள்வார்கள்.
சில பிள்ளைகளுக்கு மைலோமெனிங்கோசெல் எனப்படும் முதுகெலும்பு பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை மருத்துவ மொழியில் முதுகெலும்பு பிஃபிடா என குறிப்பிடுகிறார்கள். இது பிள்ளைகள் வயிற்றில் கருவாக இருக்கும் தருணத்தில் முதுகெலும்பு பகுதிகள் முழுமையாக வளர்ச்சி அடையாத நிலையை குறிப்பிடுகிறது. மேலும் இது ஒரு நரம்பு குழாய் குறைபாடு என்றும் குறிப்பிடலாம்.
பொதுவாக இத்தகைய நரம்புக் குழாய் கருவில் இருக்கும் போதே உருவாகி கருத்தரித்த 28 வது நாளில் தானாக மறைந்து விடும் சில தருணங்களில் சில பிள்ளைகளுக்கு இவை முழுதாக மூடாததன் காரணமாக எலும்பு குறிப்பாக முதுகெலும்புகளை பாதிக்கிறது. இவற்றில் பல வகை இருக்கிறது அவற்றில் ஒன்றுதான் மைலோமெனிங்கோசெல் என்பது.
இவை சற்று தீவிரமான பாதிப்பை சுட்டிக்காட்டுகிறது. இதற்கு வைத்தியர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் பரிசோதனை மேற்கொண்டு அதன் பிறகு நவீன சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை அளிக்கிறார்கள்.
வெகு சிலருக்கு மட்டும் இத்தகைய பாதிப்பை துல்லியமாக கண்டறிந்து கருவாக இருக்கும் தருணத்திலேயே சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் அளிக்கிறார்கள்.
இந்த சத்திர சிகிச்சைக்கு பிறகு பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றால் வைத்தியர்கள் வழங்கும் சத்திர சிகிச்சைக்கு பின்னரான நடைமுறைகளை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்.
(வைத்தியர் நேகா தொகுப்பு அனுஷா)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM