கிளிநொச்சியில் அமையவுள்ள இலங்கையின்  மிகப்பெரிய  மாற்றுசக்தி மின் நிலையம்

Published By: Priyatharshan

06 Jul, 2017 | 05:07 PM
image

இலங்கையின் மிகப்பெரிய மாற்றுசக்தி மின் நிலையத்துக்கான வேலைத்திட்டம், கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் இன்று காலை பூநகரி கௌதாரிமுனை  மன்னித்தலை செபஸ்ரியார்  ஆலயத்தில்  குறித்த  நிகழ்வு இடம்பெற்றது.  அதனைத் தொடர்ந்து குறித்த மாற்றுசக்தி மின் நிலையம் அமைய இருக்கின்ற  இடத்தையும்  அமைச்சர் தலைமையிலான  குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

காற்று, சூரிய ஒளி ஆகியவற்றைக்கொண்டு மாற்று மின்சக்தி நிலையங்களை உருவாக்குவதே குறித்த திட்டத்தின் நோக்கமாகும்.

மேலும் சூரியசக்தி மூலம் 800 மெஹா வோல்ட்டும் காற்றலை மூலம் 240 மெஹா வோல்ட் டும் பெறக் கூடிய திட்டமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மூன்று பிரிவுகளாக இவ் வேலைத்திட்டம் நடைபெறள்ளது. அத்துடன் முதற்கட்டமாக ஒகஸ்ட் மாதம் சுமார் 270 மெஹா வோல்ட்   பெறக்கூடியவாறு  மாற்றுசக்தித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சின் அதிகாரிகள், மாவட்ட அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07