தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு தேவையான பெளதீக வசதிகளை வழங்குமாறு கோரி, அந்த அலுவலகத்தில் பணிபுரியும் 150க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து திங்கட்கிழமை (26) காலை பெருமளவிலான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2020ஆம் ஆண்டு லிந்துலை நகர சபைக்கு சொந்தமான இரு மாடிக் கட்டிடத்தில் தலவாக்கலை பிரதேச செயலகம் நிறுவப்பட்டு, தலவாக்கலை, திம்புல, அகரபத்தனை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 1,30,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவை வழங்கி வருகிறது. இருப்பினும் செயலகத்தில் தேவையான பெளதீக வசதிகள் இல்லை என்பதால், மக்கள் சேவைகள் சீராக வழங்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொது நிர்வாக அமைச்சு செயலாளரும், ஜனாதிபதி செயலாளரும் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்டும் இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை என்பதே இந்தப் போராட்டத்தின் காரணமாகும்.
அரசியலற்ற போராட்டமாக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில், கோரிக்கைகள் பொறிக்கப்பட்ட பதாதைகள் ஏந்தப்பட்டும், கோசங்கள் எழுப்பப்பட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
தலவாக்கலை நகரை சுற்றி நடைபவணியாக சென்ற இந்த ஆர்ப்பாட்டம், ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடையை ஏற்படுத்தியது. இதனால், பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM