(எம்.சி.நஜிமுதீன்)

நாட்டில் தீவிரமடைந்துள்ள டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடியதளவுக்கு சுகாதார அமைச்சர் தள்ளப்பட்டுள்ளார். எனவே அவர் தனது இயலாமையை ஏற்றுக்கொண்டு பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும். ஏனெனில் இலவச சுகாதாரத் துறை நாட்டின் தேசிய வளமாகும். அதில் அசிரத்தை காட்ட முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

Image result for வாசுதேவ நாணயக்கார virakesari

கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய வளப் பாதுகாப்பு நிலையம் ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள அபயராம விகாரையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.