இலங்கை அணியின் சகலத்துறை வீரர் திஸர பெரேரா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

தனது ஓய்வு தொடர்பான கடிதத்தை அவர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

26 வயதேயான இவர் இதுவரை இலங்கை சார்பில் ஆறு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கலந்து கொண்டு அதில் 203 ஓட்டங்களையும் 11 விக்கட்டுக்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.