ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவு!

Published By: Vishnu

25 May, 2025 | 11:28 PM
image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்படும் முன்னணி ‘ஆசிய விஞ்ஞானி’ எனும் சஞ்சிகை இன் ‘ஆசிய விஞ்ஞானி; - 100   பட்டியலில்  இடம் பெற்றுள்ளார். 

ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டியல், ஆசியாவிலுள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளின் விசேட சாதனைகளை அங்கீகரிக்கிறது. பொதுவாக, இந்த பட்டியலில் தேர்வு செய்யப்படும் தலைசிறந்த விஞ்ஞானிகள், அவர்களின் தரமான ஆய்வு வெளியீட்டுக்கப்பால் தேசிய அல்லது சர்வதேச விருதை பெற்றிருக்க வேண்டும். பதிலாக முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது கல்விசார் அல்லது தொழில்சார் தலைமைத்துவத்தை வழங்கியிருக்க வேண்டும்.

விஞ்ஞானப் பீடாதிபதியாக கடந்த ஜந்து ஆண்டுகள் பணியாற்றிவரும் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் அவர்கள் பல தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவற்றில், துணைவேந்தர்கள் இயக்குனர்கள் சபையினரால்  வழங்கப்பட்ட பௌதிக விஞ்ஞானத்திற்கான அதி சிறந்த இள ஆராய்ச்சியாளர் விருது,  தேசிய விஞ்ஞான மன்றத்தினால்  வழங்கப்பட்ட இள விஞ்ஞானி விருது, மற்றும் தேசிய ஆராய்ச்சி பேரவை  பல தடவைகள் வழங்கிய சிறந்த ஆராய்ச்சி வெளியீட்டுகளுக்கான ஜனாதிபதி விருதுகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவரின் ஆய்வுக் கட்டுரைகள் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளால் அதிகளவு மேற்கோளிடப்பட்டு வருகின்றன. 

சர்வதேசத்தரத்திலான இவரது ஆய்வுச் செயற்பாடுகளினால்  ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக தெரிவாகியுள்ள சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்லாது யாழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2050-க்குள் ஆசியா பொருளாதார மையமாகும்; இலங்கை...

2026-07-16 16:46:15
news-image

"நேர்மைமிக்க கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா"...

2026-07-16 16:36:18
news-image

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்...

2026-07-16 16:18:53
news-image

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு...

2026-07-16 15:50:29
news-image

ஜனாதிபதி தலைமையில் துறைமுகங்கள் மற்றும் சிவில்...

2026-07-16 15:33:42
news-image

83 சதவீத சிறைச்சாலை உயர் பதவிகள்...

2026-07-16 15:22:32
news-image

நோர்வூட் தேயிலை தோட்டத்தில் மாணிக்கக் கல்...

2026-07-16 14:50:48
news-image

எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணைகள் வெறும் ஊடக...

2026-07-16 14:41:36
news-image

ஆனைவிழுந்தான் புகையிரத உப-நிலையம் மீண்டும் திறப்பு

2026-07-16 14:45:43
news-image

புதிய கடற்படைத் தளபதி பிரதமரைச் சந்தித்தார்!

2026-07-16 14:01:41
news-image

யோஷித ராஜபக்‌ஷ, பாட்டி டெய்ஸிக்கு எதிரான...

2026-07-16 13:31:21
news-image

உயர்தர பரீட்சையை பிற்போடுவது தொடர்பான மனு...

2026-07-16 13:17:48