பேலியகொட , களுபாலம், 4 ஆவது மைல் கல் அருகில் 11 கிலோ நிறையுடைய கேரள கஞ்சாவுடன் இருவரை பேலியகொட பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த  தகவலின் அடிப்படையில்  பேலியகொட போலிஸாரின் உதவியுடன் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 குறித்த கேரளா கஞ்சாப் பொதிகளை வியாபார நடவடிக்கைகளுக்காக கைமாற்றும் போதே குறித்த இரு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் மீட்கப்பட்ட கஞ்சா பொதிளுடன் பேலியகொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.