கிழக்கின் புதிய ஆளுநராக தெரிவுசெய்யப்பட்டுள்ள ரோஹித்த போகொல்லாகமவுடன் இணைந்து கிழக்கின் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளத் தான் தயாராக இருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதல்வர்  ஹாபிஸ் நஸீர் அஹமட் புதிதாக கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித்த போகொல்லாகமவை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.