ஊழியர்களின் குறைந்தபட்ச மாதந்த ஊதியம் 27ஆயிரம் ஏப்ரல் முதல் அமுலாகுமென வர்த்தமானி அறிவித்தல்

25 May, 2025 | 12:24 PM
image

ஆர்.ராம்

நாட்டிலுள்ள ஊழியர்களின் குறைந்தபட்ச தேசிய மாதாந்த ஊதியம் 27ஆயிரம் ரூபாவாகவும் தேசிய நாளாந்த ஊதியம் 1800 ரூபாவாகவும் வரையறுக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊதியத் தொகையானது ஏப்ரல் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையில் அமுலாகுமெனவும் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டின் மூன்றாம் இலக்க தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் பிரிவு 3 இன் திருத்தத்தைத் தொடர்ந்து குறித்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்த ஊதியம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

திருத்தப்பட்ட சட்டப்பிரிவுக்கு அமைவாக, 2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2025 டிசம்பர் 31ஆம் திகதி வரையில் தேசிய குறைந்தபட்ச மாதாந்த ஊதியத்தை 9,500 ரூபாவாலும் தேசிய குறைந்தபட்ச நாளாந்த ஊதியத்தை 380 ரூபாவாலும் மேலும் அதிகரிக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த வர்த்தமானியில் 2026 ஜனவரி முதலாம் திகி முதல் தேசிய குறைந்தபட்ச மாதாந்த ஊதியத்தை 3,000 ரூபாவாலும் தேசிய குறைந்தபட்ச தினசரி ஊதியத்தை 120 ரூபாவாலும் அதிகரிக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2026ஆம் ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னர் எந்தவொரு தொழில் அல்லது சேவையிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் தேசிய குறைந்தபட்ச மாத ஊதியம் 30,000ஆகவும், தேசிய குறைந்தபட்ச தினசரி ஊதியம் 1,200 ரூபாவாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

--

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பொலன்னறுவை...

2025-12-13 15:25:09
news-image

நான்கு பேருடன் பயணித்த வேன் கால்வாயில்...

2025-12-13 13:27:28
news-image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களைப்...

2025-12-13 15:00:57
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-12-13 14:36:56
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பில் 590...

2025-12-13 14:39:38
news-image

15 வயது மாணவி மீது பாலியல்...

2025-12-13 12:29:31
news-image

அலவத்துகொடை - அங்கும்புர பிரதான வீதியில்...

2025-12-13 14:45:21
news-image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் வைத்தியசாலையை சுகாதார...

2025-12-13 14:54:39
news-image

சம்மாந்துறையில் மான் இறைச்சி, துப்பாக்கி மற்றும்...

2025-12-13 12:06:52
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Asriel...

2025-12-13 12:03:47
news-image

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு...

2025-12-13 11:47:30
news-image

புத்தளத்தில் காணி ஒன்றில் இருந்து ஆயுதங்கள்...

2025-12-13 11:46:37