SDB வங்கி மூலப்பொருள் விநியோகத்தர்கள் மற்றும் கருதியுள்ள கொள்வனவாளர்கள் ஆகிய இருவருக்குமான நிலைபேண் நிதியிடலை வலுப்படுத்துவதனால் சமுதாயங்களை வலுப்படுத்துவதற்கான வங்கியின் மைய கொள்கையுடன் இணைந்தவாறு மற்றொரு பெறுமதி நிதியிடலை (VFC) தொடங்கவுள்ளது.
VFC வியாபார மாதிரியானது தத்தமது தனித்துவமான தேவைகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பொருத்தமான நிதிசார் ஆதரவினை வழங்குவதனால் பல்வேறு துறைகளையும் வலுப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் நிதியானது கால்நடை கொட்டகைகளை புனருத்தாரனம்செய்தல், கொட்டகை கட்டுமானம் மற்றும் மந்தை கொள்வனவு ஆகியவற்றினை வளப்படுத்தும் கருவிகளாக விளங்குகின்றன.
SDB வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி கபில ஆரியரத்ன அவர்கள் கருத்து தெரிவிக்கையில் 'SDB வங்கியின் பெறுமதி சங்கிலி நிதியிடலானது தனித்துவமான நிதியியல் தீர்வுகள் மூலமாக துறைசார் வளர்ச்சியினை முன்னகர்த்தும் எமது அரப்பணிப்பினை எடுத்துக்காட்டுகின்றது.
எமது முதலாவது செயற்றிட்டமாக CEETEE உடனான எமது கூட்டுறவானது பாலுற்பத்தி துறையின் அபிவிருத்திக்கான எமது அர்ப்பணிப்பிற்கான உதாரணமாகின்றது.' என்றார்.
பாலுற்பத்தி விவசாயிகளுக்கான விழிப்புணர் அமர்வானது மாடு உற்பத்தியினை மேம்படுத்தல், பால் பாதுகாப்பு தொழிநுட்ப கொள்வனவு மற்றும் நிதிசார் அறிவு போன்ற முக்கிய விடயங்களை உள்ளடக்கியிருந்தது.
வெளிவாரி நிபுணர்கள் மற்றும் SDB வங்கி அணியுடனான பங்குடைமையில் நடாத்தப்பட்ட, இப்பயிற்சிப்பட்டறையானது பாலுற்பத்தி விவசாயிகளை அவர்களுக்குத் தேவையான அறிவு மற்றும் திறன்களுடன் வலுப்படுத்துவதனை நோக்கிய முக்கியதொரு அடியாக விளங்கியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM