இன்றைய திகதியில் எம்மில் பலரும் சர்வதேச நுகர்வு கலாச்சாரத்திற்கு ஆதரவளித்து வருவதால் எம் மண்ணிற்கு அன்னியமான பல உணவுப் பொருளும், உணவு வகைகளும் அறிமுகமாகி இருக்கிறது. அதனை நாமும். ருசிக்க தொடங்கி இருக்கிறோம். இதனால் விவரிக்க இயலாத துன்பங்களுக்கும் ஆளாகி வருகிறோம். இந்நிலையில் நாம் நினைத்த விடயம் எளிதில் தடை இன்றி, பலரின் நிபந்தனையற்ற ஆதரவுடன் நிறைவேறி வெற்றியை அளிப்பதற்கான உணவு பொருளை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பட்டியலிட்டு வழங்கி இருக்கிறார்கள்.
உங்களது சோதிடரிடம் சென்று உங்களுடைய ஜென்ம நட்சத்திரம் எது என்பதனை கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு, அதிலிருந்து உங்களுக்கு எந்தெந்த நட்சத்திரங்கள் நல்ல பலனை வழங்கும் என்றும் கேட்டு, அதற்கான விடையை பெற்று, அந்த நட்சத்திரத்திற்குரிய உணவுகளை நீங்கள் அதிகமாக பசியாற தொடங்கினால். உங்களுக்கு உங்களையும் அறியாமல் சூட்சமமான முறையில் அதீத ஆற்றலை பெற்று, நீங்கள் நினைத்த விடயத்தில் வெற்றியை பதிவு செய்வீர்கள். அதனூடாக மகிழ்ச்சியும் அடைவீர்கள். இதனைத் தொடர்ந்து நீங்கள் எந்த நட்சத்திரம் அந்த நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் உணவுகளின் பட்டியலை வழங்கி இருக்கிறோம்.
அஸ்வினி - முந்திரி
பரணி - நெல்லிக்காய்/ நெல்லிக்கனி
கிருத்திகை - பேரிச்சம்பழம்
ரோகிணி - பால்கோவா
மிருகசீரிஷம் - தேங்காய் சாதம்
திருவாதிரை வாழைப்பழம்
புனர்பூசம் - கரும்புச்சாறு
பூசம் - அப்பிள்
ஆயில்யம் - முருங்கைக்காய் / முருங்கை கீரை
மகம்- மாங்காய்
பூரம் - எலுமிச்சை சாதம்
உத்திரம் - மாதுளம் பழம்
ஹஸ்தம் - ஓரஞ்சு பழம்
சித்திரை - பப்பாளி
சுவாதி- உலர் திராட்சை
விசாகம் - கற்கண்டு
அனுஷம் - சப்போட்டா
கேட்டை- வல்லாரைக் கீரை + செர்ரி பழம்
மூலம் - கொய்யாப்பழம்
பூராடம் - காளான்
உத்திராடம் - பலாப்பழம்
திருவோணம் - சீதாப்பழம்/ கேசரி ( இனிப்பு)
அவிட்டம் - தக்காளி சாதம்
சதயம் - பன்னீர் திராட்சை
பூரட்டாதி - மாம்பழம்
உத்திரட்டாதி - அன்னாசிப்பழம்
ரேவதி - இலந்தை பழம் / கொத்தமல்லி சாதம்
மேற்கண்ட உணவு வகைகளையும் , உணவுகளையும் குறிப்பாக பழங்களை சூரியன் உதயத்திலிருந்து சூரியன் உச்சம் செல்லும் வரையிலான காலகட்டத்திற்குள் சாப்பிட்டால் கூடுதல் பலனை பெறலாம் என்பதனையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM