தாய்லாந்தில் சமீபத்தில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தெருவில் சுற்றித்திரிந்த ஒரு பூனைக்கு உதவ முனைந்த ஒருவரால் தொடங்கிய இந்த சம்பவம், பொலிஸாரின் ‘கைது’ வரை சென்றதோடு, அந்த பூனைக்கு பிணையில் விடுதலையும் கிடைக்க வைத்துள்ளது.
அழகான சாம்பல் நிற அமெரிக்கன் ஷார்ட் ஹேர் இனத்தைச் சேர்ந்த இந்த பூனை, அடையாளம் கூறும் இளஞ்சிவப்பு நிற காலரில் காணப்பட்டதால், யாரோ இழந்த பூனையாக இருக்கலாம் என எண்ணிய ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
விலங்குகளை நேசிக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவர் இந்த பூனைக்கு பராமரிப்பு வழங்க முனைந்தபோது, பூனை அவரையும் மற்ற அதிகாரிகளையும் கடித்து தாக்கியுள்ளது.
இதனையடுத்து, இந்த ‘குற்றவாளி’ பூனையை அதிகாரபூர்வமாக கைது செய்துவிட்டு, அதன் பஞ்சு கைகளின் கையொப்பங்களுடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.
பொதுமக்களுக்கு இது பற்றிய தகவல் தெரிய பொலிஸ் அதிகாரி , தனது சமூக வலைதளத்தில்,
“நான் பசித்ததால் தான் கடித்தேன். யாரையும் வேண்டுமென்றே கடிக்கவில்லை…”
என்று பூனை சொன்னது போல எழுதி,
“இந்த பூனை பொலிஸாரை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளது. யாராவது உரிமையாளர் இருந்தால் வந்து பிணையில் விடுவிக்கவும்!” என்று பதிவிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் இந்த பதிவு வேகமாக பரவ, அதன் உண்மையான உரிமையாளர் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு, பூனையை பிணையில் மீட்டுச்சென்றுள்ளார்.
அந்த பூனையின் பெயர் ‘நப் தாங்’: பூனையை பிணையில் விடுதலை செய்ததை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், பொலிஸார் பூனைக்கு அழகான பூச்சடை காலரை அணிவித்து, புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM