இன்றைய இளம் தலைமுறையினர் தங்களுடைய பொருளாதார நிலையின் உயர்வு காரணமாக வாழ்க்கை நடைமுறை, உணவு முறை ஆகியவற்றை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் கடினமான உடல் உழைப்பு இல்லாத நிலை உருவாகி இருக்கிறது. மேலும் விவரிக்க இயலாத ஆரோக்கிய கேடுகளும் ஏற்படுகிறது. இந்நிலையில் எம்மில் பலரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
ஆனால் அதற்கான அறிகுறியை அவர்கள் உணர்ந்து இருக்க மாட்டார்கள் அல்லது வேறு நோயிற்கான அறிகுறியுடன் ஒப்பிடுவார்கள். அத்துடன் அதற்கான எளிய நிவாரண சிகிச்சையும் மேற்கொண்டிருப்பார்கள்.
ஆனால் புற்று நோய் ஏற்பட்டிருந்தால் அதனையும் அறிகுறிகளின் மூலம் அவதானிக்க இயலும். இது தொடர்பாக வைத்தியர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.
யார் ஒருவர் அவர்களுடைய உடல் எடையிலிருந்து விரைவாக எடை குறைவு ஏற்படுகிறதோ.. அதுதான் புற்றுநோய் பாதிப்பின் தொடக்க நிலை அறிகுறியாகும்.
இதனைத் தொடர்ந்து அகால தருணங்களில் விரும்ப தகாத நிலையில் எழும் இருமல், பேசிக் கொண்டிருக்கும்போதே குரலில் தடுமாற்றம், மேலும் இரவு நேரங்களிலும் விவரிக்க முடியாத காரணங்களால் உண்டாகும் அதீத வியர்வை, தொடர்ந்தோ அல்லது விட்டு விட்டோ வயிற்று வலி, மலச்சிக்கல் போன்றவை ஏற்படுவது, இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடிக்கும் வயிறு உப்புசம்.
ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால்... உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று, புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? இல்லையா ? என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
வைத்தியர் ஹரிதாஸ் தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM