மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய காளாஞ்சி வழங்கும் நிகழ்வு

24 May, 2025 | 05:29 PM
image

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வு  சனிக்கிழமை (24) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து திருநெல்வேலி வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தில் காலை விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் செங்குந்த மரபுடையவர்களுக்கான காளாஞ்சி எடுத்துச் செல்லப்பட்டு திருநெல்வேலி கென்னடி வீதியில் உள்ள சண்முகநாதன் கபிலன் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டு பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஆலய திருப்பணிச் சபையைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.

திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும்  31ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில்  30ஆம் திகதி  பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில்...

2025-06-13 20:55:14
news-image

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய...

2025-06-12 16:29:26
news-image

புத்தகங்கள் வழங்க மகளிர் அணி ஏற்பாடு

2025-06-12 13:40:43
news-image

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் பொசன் போயாவை...

2025-06-11 19:39:19
news-image

நேஷன்ஸ் டிரஸ்ட் வனவிலங்குகள் மற்றும் இயற்கையைப்...

2025-06-10 14:53:12
news-image

வெள்ளவத்தை ஸ்ரீ மயூரபதி பத்திரகாளி அம்மன்...

2025-06-09 17:07:35
news-image

பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ வற்றாப்பளை...

2025-06-09 15:28:38
news-image

ஆங்கில Access புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தை நிறைவு...

2025-06-09 13:36:11
news-image

யாழ்ப்பாணம் - நல்லூர் சிவன் கோவில்...

2025-06-09 10:23:44
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற...

2025-06-09 10:23:28
news-image

சிங்கப்பூரில் “தமிழிசை மூவர்” திருவுருவ ஓவியம்...

2025-06-09 08:58:54
news-image

களைகட்டிய இளைஞர் ஹைக்கூ கவியரங்கம்

2025-06-09 02:33:05