கிராமத்து சுவையில் இறால் கறி

24 May, 2025 | 04:51 PM
image

கிராமத்து முறையில் இறால் கறி செய்வது எப்படி என்று பார்ப்போம்......

தேவையான பொருட்கள் ;

1. இறாலை ஊறவைக்க

  • இறால் - 1/2 கிலோ
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  • மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி 
  • தனியா தூள் - 1 தேக்கரண்டி 
  • உப்பு - 1 1/2 தேக்கரண்டி 

2. மசாலா தூள் அரைக்க

  • தனியா - 2 மேசைக்கரண்டி 
  • சீரகம் - 1 தேக்கரண்டி 
  • மிளகு - 1 தேக்கரண்டி
  • ஏலக்காய் - 4
  • கிராம்பு 
  • பட்டை - 3 துண்டு 
  • காஷ்மீரி மிளகாய் - 7
  • காய்ந்த மிளகாய் - 7 

3. இறால் கறி செய்ய

  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • சோம்பு - 1 தேக்கரண்டி 
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் - 25 நறுக்கியது
  • பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
  • கறிவேப்பிலை
  • இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • தக்காளி - 2 நறுக்கியது
  • தேங்காய் பால் - 1 கப்
  • கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை ;

1. இறாலில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

2. கடாயில் தனியா, சீரகம், மிளகு, ஏலக்காய், பட்டை, காஷ்மீரி மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து ஆறவிட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்.

3. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

4. பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கலந்துவிடவும்.

5. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

6. இறாலை சேர்த்து கலந்து பின்பு மிளகாய் தூள், அரைத்த மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும்.

7. பிறகு தண்ணீர் மற்றும் தேங்காய் பால் ஊற்றி கலந்துவிடவும்.

8. கடாயை மூடி 8 நிமிடம் சிம்மில் வேகவிடவும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கவும்.இறால் கறி தயார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right