தமிழ்நாடு திருஞானசம்பந்தர் திருமடத்தைச் சேர்ந்த திருக்கைலாய பரம்பரை ஸ்ரீ கந்தப் பரம்பரை சூரியனார் கோயில் ஆதின ஸ்ரீ கார்யம் அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் திங்கட்கிழமை (26) இலங்கைக்கு வரவுள்ளார்.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகளின் திருமுறை அருளாசியுரை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (27) 5.00 மணி முதல் 7:00 மணி வரை நடைபெறும்.
வெள்ளிக்கிழமை (30) காலை 10 மணிக்கு இந்து சமய கலாசார அலுவலர்கள் திணைக்களத்தின் வழிகாட்டலில் பிரணவம் அறக்கட்டளை அவுஸ்திரேலியா சிவஞான தமிழ் பேரவை ஏற்பாட்டில் ஹட்டன் என்பீல்ட் மந்தாகினியில் திருஞானசம்பந்தர் திருமட அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து காலை. 11.00 மணிக்கு யமுனா நதிக்கரையில் இருந்து சுவாமிகளது திருகரத்தினால் வழங்கப்பட்ட சுயம்புலிங்கமான காசி விஸ்வநாதர் ஆலய காசிலிங்க பிரதிஷ்ட வைபவமும் நடைபெறும்.
பன்னிரு திருமுறை ஓதுதல் அருளாசியும் உருத்திராக்கம் அணிவித்தலும் சனிக்கிழமை (31) காலை 11:30 மணிக்கு நடைபெறவுள்ளது.
பூசை வழிபாடுகளின் நிறைவில் அன்னதானமும் வழங்கப்படும்.
எதிர்வரும் 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு பண்டாரவளை அருள்மிகு ஸ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தான இந்து காலாசார மண்டபத்தில் அருளாசியுரை வழங்கவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM