மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஹட்டன் கல்வி வலயத்துக்கான சுமார் 8 இலட்ச ரூபா பெறுமதி வாய்ந்த வேலைத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை (25) மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரி பிரதான மண்டபத்தில் முற்பகல் 10 மணிக்கு மூன்று பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஊடக இணைப்பாளர் கே. கிருஸ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் திட்டமிடல் முகாமையாளர் சங்கர் சுரேஷ் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு கல்லூரி அதிபர் என். பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில், மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் ஏ. சிவஞானம் உட்பட மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்வார்கள்.
மஸ்கெலியா சென் ஜோசப் கல்லூரி அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க சுமார் 5 இலட்ச ரூபா பெறுமதி வாய்ந்த “போடியம்” உட்படமுழுமையான ஒலிபெருக்கி உபகரணத் தொகுதியும், சாமிமலை கிங்கோரா தமிழ் வித்தியாலயத்துக்கு 2 இலட்ச ரூபா பெறுமதி வாய்ந்த போட்டோ பிரதி இயந்திரத் தொகுதியும், சாமிமலை பாரதி தமிழ் மகா வித்தியாலயத்துக்கு ஓரு லட்சம் ரூபாய் செலவில் பழுதபார்க்கப்பட்ட வகுப்பறை தளபாட உபகரணங்களும் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM