பிமலின் நடத்தைகள் குறித்து விசாரியுங்கள்; எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுத்துமூலம் சபாநாயகரிடம் கோரிக்கை

Published By: Vishnu

24 May, 2025 | 01:18 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சபைமுதல்வர் பிமல் ரத்நாயக்கவின் செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள்  கடந்த கால சபை முதல்வர்களின் நன்நடத்தைக்கு முற்றிலும் விரோதமானது என்று குறிப்பிட்டு 2025.05.20 ஆம் திகதியன்று சபை முதல்வர் நடந்துக் கொண்ட விதம் குறித்து விசாரணை செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் எழுத்துமூலமாக வலியுறுத்தியுள்ளனர்.

சபாநாயகரிடம் வெள்ளிக்கிழமை (23) முன்வைத்துள்ள வலியுறுத்தல் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 2025.05.20 ஆம் திகதியன்று நிலையியல் கட்டளை 92(2) ஆ, பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகரின் அனுமதியுடன் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபையில் உரையாற்றினார்.

 இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய ஆளும் தரப்பின் உறுப்பினர் கெளசய்லா ஆரியரத்ன சபாநாயகர் வழங்கிய அனுமதி மற்றும் நிலையியல் கட்டளையை கேள்விக்குட்படுத்தினார்.இச்சந்தர்ப்பத்தில் சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க தகாத வார்த்தைகளை பிரயோகித்து தயாசிறி மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உரையாற்றினார்.இவரது கூற்றுக்கள் நிலையியல் கட்டளை 91( உ) பிரிவுக்கு முரணானது. 

10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஆரம்பமான தினத்தில் இருந்து சபை முதல்வரின் செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள் கடந்த கால பாராளுமன்றத்தின் சபைமுதல்வரின் நன்நடத்தைகளுக்கு முற்றிலும் விரோதமானது.ஆகவே 2025.05.20 ஆம் திகதியன்று சபை முதல்வர் சபையில் நடந்துக் கொண்ட விதம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை மோதல்கள்: 5 வாரங்களில் 36...

2026-08-08 16:46:41
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தை சிதைக்க ஜனாதிபதி அநுர...

2026-08-08 16:01:44
news-image

வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய...

2026-08-08 18:38:24
news-image

சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்:...

2026-08-08 15:22:29
news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36
news-image

தூய்மையான இலங்கைக்கான மக்கள் பணி" -...

2026-08-08 16:46:57
news-image

இலங்கைக்குக் கடத்த முயன்ற 297 கிலோ...

2026-08-08 16:52:24