(நெவில் அன்தனி)
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பின் கடைசி நாளான இன்று வெள்ளிக்கிழமை (23), இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை வென்று கொடுப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யஸ்மின் மொஹமத் உசெய்த், வெள்ளிப் பதக்கத்தை வென்று திருப்தி அடைந்தார்.
அத்துடன் 22 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் மஞ்சரி சந்துனிக்கா நரசிங்க, ஹன்சனி நாயக்கரத்ன, தருஷிக்கா நாகந்தலகே ஆகியோரும் வெள்ளிப் பதக்கங்களை வென்றெடுத்தனர்.
கடந்த 12ஆம் திகதி ஆரம்பமாகி இன்று நிறைவுபெற்ற ஆசிய 22 வயதக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பயின்ஷிப்பில் இலங்கை 5 வெள்ளிப் பதக்கங்கள், 18 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 23 பதக்கங்களை வென்றெடுத்தது.
22 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 75 கிலோ கிராம் எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் கஸக்ஸ்தான் வீரர் அமான் கொன்ஸ்பெக்கோவை எதிர்கொண்ட உசெய்த் 0 - 3 சுற்றுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
முதல் சுற்றின் ஆரம்பத்தில் அமான் கொன்ஸ்பெக்கோவை அடுத்தடுத்து தாக்கிய உசெய்த், அதன் பின்னர் பின்னடையத் தொடங்கினார்.
அமானின் ஒரு தாக்குதலில் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிய உசெய்த் குத்துச்சண்டை மேடையின் விளிம்புக்கு தள்ளப்பட்டார்.
இதன் காரணமாக உசெய்த்தினால் மீள முடியாமல் போனது.
முதல் சுற்றில் 8 - 10, 9 - 10, 9 - 10, 9 - 10, 9 - 10 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்த உசெய்த் இரண்டாவது சுற்றிலும் எதிர்பார்க்கப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடவில்லை.
கஸக்ஸ்தான் வீரர் தன்னை விட உயரம் குறைந்தவராக இருந்ததால் உசெய்த் 'அப்பர்கட்' தாக்குதலை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடைபெறாததுடன் அவரது வேகமும் போதுமானதாக அமையவில்லை. இரண்டாவது சுற்றில் 9 - 10, 9 - 10, 9 - 10, 9 - 10, 9 - 10 என்ற புள்ளிகள் கணக்கில் உசெய்த் மீண்டும் தோல்வி அடைந்தார்.
மூன்றாவதும் கடைசியுமான சுற்றில் களைப்புற்றவராக காணப்பட்ட உசெய்த், எதிராளியின் தாக்குதல்களை தடுப்பதில் குறியாக இருந்ததுடன் அவரால் எதிர் தாக்குதல்களைத் தொடுக்க முடியாமல் போனது. இறுதியில் அந்த சுற்றில் 8 - 10, 9 - 10, 9 - 10, 9 - 10, 9 - 10 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்தார்.
எவ்வாறாயினும் இலங்கை சார்பாக பங்குபற்றிய 33 வீர, வீராங்கனைகளில் உசெய்த் மாத்திரமே திறமையாக சண்டையிட்டதை அவதானிக்க முடிந்தது.
இந்த தோல்வியால் துவண்டுவிடவில்லை எனவும் இறுதிப் போட்டியில் நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டதாகவும் போட்டிக்குப் பின்னர் தெரிவித்த உசெய்த், சர்வதேச குத்துச்சண்டையில் தங்கம் பதக்கம் வெல்லும் வரை ஓயமாட்டேன் என்றார்.
இலங்கைக்கு பெண்கள் பிரிவில் மூன்று வெள்ளிப் பதக்கங்கள்
22 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான இறுதிப் போட்டிகளில் நேரடியாக பங்குபற்றிய இலங்கை வீராங்கனைகள் மூவரும் முதல் சுற்றிலேயே தொல்வி அடைந்து வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றனர்.
63 கிலோ கிராம் எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் கஸக்ஸ்தான் வீராங்கனை ஸங்கபயேவா அருஸானை எதிர்கொண்ட ஹன்சனி நாயக்கரத்ன போட்டி ஆரம்பித்த சற்று நேரத்தில் தோல்வி அடைந்தார். அப் போட்டியில் ஹன்சனி நிலைகுலைந்ததால் போட்டியை மத்தியஸ்தர் முதல் சுற்றுடன் நிறுத்தினார்.
75 கிலோ கிராம் எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் கஸக்ஸ்தான் வீராங்கனை நலிபே ஷகிலாவிடம் இலங்கை வீராங்கனை மஞ்சரி சந்துனிக்கா நரசிங்கவும் 81 கிலோ கிராம் எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் கஸக்ஸ்தான் வீராங்கனை ஸரக்ஸ்கிஸி ஸிபேக்கிடம் இலங்கை வீராங்கனை நெத்மி தருஷிக்கா நாகந்தலகேவும் முதல் சுற்றுடனேயே தோல்வி அடைந்து வெளியேறினர்.
இந்தப் போட்டி முடிவுகள் தொடர்பாக மூன்று வீராங்கனைகளிடம் கேட்டபோது, 'சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் பங்குபற்றுவது இதுவே முதல் தடவை. இதன் மூலம் நாங்கள் நிறைய படிப்பினைகளைக் கற்றுக்கொண்டோம். எதிர்காலத்தில் சர்வதேச குத்தச்சண்டைப் போட்டிகளில் திறமையாக போட்டியிடும் வகையில் தீவிர பயிற்சிகளில் ஈடுபடவுள்ளோம்' என்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM